Nov 25, 2026 - 05:45 PM

செலான் வங்கி, Kedalla Construction Expo 2026 உடன் தொடர்ந்து 15வது ஆண்டாக அதன் title மற்றும் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளராகக் கைகோர்ப்பதில் பெருமிதம் கொள்கிறது. நாட்டின் மிகப்பெரிய வாழ்க்கைமுறை கண்காட்சியாகயாக அங்கீகரிக்கப்பட்ட இந்நிகழ்வு, BMICHஇல் நவம்பர் 13 முதல் 15 வரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி, வீடுகளை நிர்மாணித்தல், அலங்கரித்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் பார்வையிடுவதற்கான வாய்ப்பை வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்குகிறது.
அன்புடன் அரவணைக்கும் வங்கி என்ற தனது வாக்குறுதிக்கு அமைவாக, செலான் வங்கி இக்கண்காட்சியில் விசேட
காட்சிக்கூடமொன்றை அமைக்கவுள்ளது. இங்கு பார்வையாளர்கள் தமது தேவைகளுக்கு ஏற்ற பல்வேறு நிதித் தீர்வுகள்
மற்றும் வங்கிச் சேவைகள் குறித்து அறிந்துகொள்ள முடியும். இதில் வீடமைப்புக் கடன்கள், தனிநபர் கடன்கள், சூரிய
மின்சக்திக் கடன்கள், லீசிங் வசதிகள், கடன் அட்டைகள், நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள், சொத்துக்கள்
மற்றும் பொறுப்புகள் சார்ந்த நிதிச் சேவைகள், டிஜிட்டல் வங்கிச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அடங்கும்.
செலான் வங்கியின் காட்சிக்கூடத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள், வீடமைப்புக் கடனைப் பெற்றுக்கொள்ளும்
நடைமுறையை மேலும் இலகுவாக்கும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். வங்கியின் ‘வீடமைப்புக் கடன்
நிபுணர்கள்’, கடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது முதல் கடன் வசதி வழங்கப்படும் இறுதிக் கட்டம் வரை
வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டல்களை வழங்குவார்கள். மேலும், போட்டித்தன்மை வாய்ந்த வட்டி வீதத்திலும்
வீடமைப்புக் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும். தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர், ஒவ்வொரு கடன்
விண்ணப்பத்தினதும் முன்னேற்றம் குறித்து இவ் விசேட நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து,
வாடிக்கையாளர்களுக்குத் தகவல்களை வழங்குவார்கள். இதனால், விண்ணப்பத்தின் நிலை குறித்து
அறிந்துகொள்வதற்காக வாடிக்கையாளர்கள் வங்கியைத் தொடர்புகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது. மேலும்,
மதிப்புமிக்க கட்டுமான மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களும் செலான் வங்கியுடன் இணைந்து வீடமைப்புக் கடன்
பெறும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளையும் சேவைகளையும் வழங்கவுள்ளன.
கண்காட்சி நடைபெறும் காலத்தில் செலான் வங்கியின் காட்சிக்கூடத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள்
பல்வேறு பிரத்தியேகச் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். இதன் போது, தற்போதைய மற்றும் புதிய
வாடிக்கையாளர்கள் இலவச CRIB கடன் அறிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், இலவச வீடமைப்புக்
கடன் மதிப்பீட்டுச் சேவையையும் பெற்றுக்கொள்ளலாம். தகைமைகளைப் பூர்த்தி செய்யும் மாதச் சம்பளம் பெறும்
வாடிக்கையாளர்களுக்கு, அங்கேயே உடனடி கடன் ஒப்புதலும் வழங்கப்படும். கடன் விண்ணப்பச் செயன்முறையின்
ஆரம்பம் முதல் இறுதி வரை செலான் வங்கியின் வீடமைப்புக் கடன் விசேட நிபுணர்கள் உதவிகளை வழங்குவதுடன்,
கடன் செயலாக்கக் கட்டணத்திலும் விசேட தள்ளுபடியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கண்காட்சியுடனான வங்கியின் நீண்டகாலத் தொடர்பு குறித்து கருத்துத் தெரிவித்த செலான் வங்கி பிஎல்சியின்
தனிநபர் வங்கிச் சேவைகளுக்கான பிரதிப் பொது முகாமையாளர் யூஜின் செனவிரத்ன, மீண்டும் Kedalla
கண்காட்சியுடன் இணைந்திருப்பது, எமது நீண்டகால இணைவையும், வீடுகளை வாங்குவோர், நிர்மாணிப்போர்
மற்றும் புதுப்பிப்போருக்கு இக் கண்காட்சி வழங்கும் மதிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. இவர்கள் அனைவரையும் ஒரே
கூரையின் கீழ் ஒன்றிணைப்பதன் மூலம் அவர்களது எதிர்காலத் திட்டங்களுக்கு ஏற்ற, இலகுவானதும் சிறந்த ஆதரவை
வழங்கக்கூடியதுமான நிதித் தீர்வுகளை நேரடியாக அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கிறது.
என்றார்.
Asia Exhibition and Conventions (Pvt) Ltd நிறுவனத்தினால் தொடர்ச்சியாக 20ஆவது ஆண்டாக ஏற்பாடு
செய்யப்படும் Kedalla Construction Expo 2026இல் 200இற்கும் மேற்பட்ட வர்த்தகக் காட்சிக்கூடங்கள்
இடம்பெறவுள்ளன. இவற்றில் பல்வேறு வாழ்க்கைமுறைப் பொருட்களும் சேவைகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
வீட்டு உபகரணங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், வீடமைப்பு மற்றும் காணி விற்பனை, நிலத்தோற்ற
வடிவமைப்பு, தளபாடங்கள், டைல்ஸ் மற்றும் கிரனைட், குளியலறை பொருத்துதல்கள், சமையலறைப் பொருட்கள்,
மின்சார உபகரணங்கள், வர்ணப் பூச்சுகள், சுவர் அலங்காரங்கள், கூரை அலங்காரங்கள், மின்விளக்குகள் மற்றும் வீட்டு
திரைச்சீலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பார்வையிட முடியும். அத்துடன் வங்கிகள் மற்றும் காப்புறுதி
நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்கவுள்ளதால், வீட்டு உரிமையாளர்கள் தமக்குத் தேவையான
தெரிவுகளையும் புதிய யோசனைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
கண்காட்சியில் செலான் வங்கி வழங்கும் சேவைகள் மற்றும் சலுகைகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 011-200
88 88 என்ற விசேட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.

































