Nov 25, 2026 - 06:00 PM

டிஜிட்டல் பாதுகாப்புக் கல்வியை ஆதரிப்பதற்கான பிரத்யேக கல்வியாளர் வழிகாட்டியின் அறிமுகத்துடன், திரை நேரம், தொடர்புகள், உள்ளடக்க ஆர்வங்கள் மற்றும் பொதுப் பதிவுகள் குறித்து பெற்றோருக்கு அதிகத் தெளிவை புதிய அம்சங்கள் வழங்குகின்றன.
பதின்ம வயதினர் இந்தத் தளத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்த அதிகத் தெளிவைப் பெற்றோருக்கு வழங்கும் புதிய அம்சங்களையும், அவர்களின் இணைய அனுபவங்களை ஆதரிப்பதற்கான பயனுள்ள நுண்ணறிவுகளையும் அறிமுகப்படுத்தி, தனது Family Pairing அனுபவத்திற்கான புதிய மேம்படுத்தலை TikTok அறிவித்துள்ளது.
மறுவடிவமைக்கப்பட்ட Family Pairing முகப்புப் பலகை (dashboard), திரை நேரம், தொடர்புகள், உள்ளடக்க ஆர்வங்கள் மற்றும் பொதுப் பதிவுகள் ஆகிய நான்கு முக்கியப் பிரிவுகளின் கீழ் தகவல்களை ஒன்றிணைக்கிறது. பதின்ம வயதினரின் செயல்பாடுகளைப் பெற்றோர் எளிதாகப் புரிந்துகொள்ளவும், அவர்களின் டிஜிட்டல் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறியவும், தாங்கள் நிர்வகிக்க விரும்பும் அமைப்புகள் (settings) குறித்துத் தெளிவான முடிவுகளை எடுக்கவும் உதவுவதே இந்தப் புதிய மேம்படுத்தலின் நோக்கமாகும்.
பதின்ம வயதினரின் கணக்குகளுக்காக TikTok ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த அறிமுகம் அமைந்துள்ளது. இதில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், தனிப்பட்ட கணக்குகள் மற்றும் வயதிற்கு ஏற்ற உள்ளடக்கக் கொள்கைகள் ஆகியவை அடங்கும். மேலும், பதின்ம வயதினரின் கணக்குகளுக்கான திரை நேரம் இயல்பாகவே 60 நிமிடங்களாக அமைக்கப்பட்டுள்ளது; இது அவர்களின் டிஜிட்டல் பழக்கவழக்கங்களை நிர்வகிப்பதற்கான ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.
புதிய மேம்படுத்தலின் மூலம், திரை நேரம் குறித்த தகவல்கள் இப்போது மிகவும் முக்கியத்துவம் பெற்று, பெற்றோருக்கான முகப்புப் பலகையில் (parental dashboard) முதல் நுண்ணறிவாகத் தோன்றுகின்றன. இதன் மூலம் பதின்ம வயதினரின் சராசரித் திரை நேரம், இரவு நேரப் பயன்பாடு மற்றும் நேர நிர்வகிப்பு அமைப்புகளைப் பெற்றோர்கள் பார்வையிட முடியும்.
தொடர்புகள் அம்சமானது, பதின்ம வயதினரைப் பின்தொடர்பவர்கள் மற்றும் அவர்கள் பின்தொடரும் (following) கணக்குகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள், அவர்கள் இணைந்துள்ள கணக்குகள் மற்றும் அவர்கள் தடுத்துள்ள (blocked) கணக்குகள் குறித்து கூடுதல் தெளிவை வழங்குகிறது. மேலும், எதிர்வரும் மாதங்களில் பதின்ம வயதினர் இந்தத் தளத்தில் யாருடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் பார்க்க அனுமதிக்கும் புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்த TikTok திட்டமிட்டுள்ளது.
பதின்ம வயதினர் பின்தொடரும் சரிபார்க்கப்பட்ட படைப்பாளர்களின் (verified creators) மாதிரி வீடியோக்கள் மூலம், அவர்களின் உள்ளடக்க ஆர்வங்களையும் பெற்றோர்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும். இது TikTokஇல் அவர்களின் அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூகங்கள் மற்றும் தலைப்புகளின் ஒரு சுருக்கமான பார்வையை (snapshot) வழங்குகிறது. TikTok கலந்தாலோசித்த பதின்ம வயதினரின் பெற்றோர்களில் 80%க்கும் அதிகமானோர், இத்தகைய அம்சத்திற்கான அணுகலைத் தாங்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
முகப்புப் பலகையில் (dashboard) இப்போது பொதுவில் பகிரப்பட்ட பதிவுகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன; இதன் மூலம் பதின்ம வயதினர் ஒவ்வொரு வாரமும் பொதுவில் என்ன பதிவிட்டுள்ளார்கள் என்பதையும், அந்தப் பதிவுகள் எத்தனை பார்வைகளைப் (views) பெற்றுள்ளன என்பதையும் பெற்றோர்கள் பார்க்க முடியும்.
போஸ்டன் குழந்தைகள் மருத்துவமனையின் Digital Wellness Lab மற்றும் Safe Online Standards நிறுவனரும் பணிப்பாளருமான டொக்டர் டான் ரீடன்பெர்க் (Dr. Dan Reidenberg - ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தற்கொலைத் தடுப்பு மையத்தின் இணைப் பேராசிரியர்) ஆகியோருடன் இணைந்து, பெற்றோருக்கான புதிய எச்சரிக்கை அமைப்பை (alert system) TikTok உருவாக்கி வருகிறது. பதின்ம வயதினர் தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளடக்கத்தைத் தேட முயற்சித்திருக்கலாம் என்பதைப் பெற்றோருக்குத் தெரிவிப்பதும், அந்தச் சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது, தங்கள் பதின்ம வயதினரிடம் எவ்வாறு விசாரிப்பது மற்றும் ஆதரவான உரையாடலை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்த நிபுணர்களின் வழிகாட்டுதலை வழங்குவதுமே இந்த அறிவிப்பின் நோக்கமாகும். இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது.
டிஜிட்டல் சூழலில் இளைஞர்களை ஆதரிப்பது என்பது வீட்டிற்கு வெளியேயும் தொடர்கிறது என்பதை அங்கீகரிக்கும் விதமாக, ஆசிரியர்கள் மற்றும் இளைஞர் பாதுகாப்பு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட பிரத்யேக வளமான 'கல்வியாளர் வழிகாட்டியையும்' (Educator's Guide) TikTok அறிமுகப்படுத்தியுள்ளது. TikTok எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த நடைமுறைத் தகவல்கள், வகுப்பறை வளங்கள் மற்றும் மாணவர்கள், குடும்பங்களுடன் இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் நல்வாழ்வு மற்றும் ஊடக அறிவு (media literacy) குறித்து உரையாடுவதற்கான வழிகாட்டுதல்களைத் தேடும் கல்வியாளர்களின் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த வழிகாட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிச் சமூகங்களுக்கான தகவல்கள், கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை இந்த வளம் ஒன்றிணைக்கிறது; மேலும், எதிர்வரும் வாரங்களில் கூடுதல் வகுப்பறைப் பாடப்பொருட்களும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கல்வியாளர் வழிகாட்டி' (Educator's Guide) மற்றும் இளைஞர் பாதுகாப்பு குறித்த மேலதிக வளங்கள் TikTokன் பாதுகாப்பு மையத்தில் (Safety Centre) கிடைக்கின்றன.

































