Oct 15, 2026 - 12:04 PM

5 கோடியே 10 லட்சம் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிச் செல்ல முற்பட்ட மூன்று வெளிநாட்டுப் பயணிகள் இன்று (15) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதுடைய இருவர் மற்றும் 33 வயதுடைய ஒருவர் அடங்களாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சாரதிகள் என அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று (15) அதிகாலை 12:30 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸ் சேவைக்குச் சொந்தமான TG-307 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 3 பயணப்பைகளைச் பரிசோதித்தபோது, அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களுக்குள் மிகச் நுட்பமான முறையில் பொதி செய்யப்பட்டிருந்த 05 கிலோகிராம் 096 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைக்காக இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
































