Oct 15, 2026 - 08:36 PM

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இங்கு பெருந்தோட்டத்துறையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.
பெருந்தோட்டக் காணிகளில் பயன்படுத்தாத பகுதிகளைப் பயன்படுத்துவது, பெருந்தோட்டங்களில் உள்ள மக்களுக்கு காணப்படும் காணிப் பிரச்சினை, வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
































