Oct 16, 2026 - 05:03 PM

சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனமானது (CEAT Kelani Holdings) உள்ளூர் விவசாயத் துறையின் சவாலான நிலைமைகளுக்கு ஏற்ற வகையில், குறிப்பாக மஹா பருவ நெல் பயிர்ச்செய்கை உழவு கட்டத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மூன்று புதிய குறுக்கு அடுக்கு (Cross-ply) டிராக்டர் டயர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தனது விவசாய டயர் வரிசையை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவற்றில், பின் சக்கரங்களுக்காக 16.9-28 மற்றும் 14.9-28 அளவுகளில் இரண்டு AAYUSHMAAN டயர்களும், முன் சக்கரங்களுக்காக 8-18 அளவிலான PUDDLE XL டயர்களும் அடங்குகின்றன. இதன் மூலம் இலங்கையில் சியெட் நிறுவனத்தின் விவசாயப் பயன்பாட்டுக்கான டயர் வரிசை தற்போது ஒன்பது அளவுகளாக விரிவடைந்துள்ளது. பலவகையான டிராக்டர்களைப் பயன்படுத்தும் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பரந்த தெரிவுகளை வழங்குவதற்கான சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறனையும் இந்தப் புதிய அறிமுகம் மேலும் வலுப்படுத்தியுள்ளது.
Sonalika, TAFE, John Deere மற்றும் Mahindra உள்ளிட்ட பிரபல டிராக்டர் வர்த்தகநாமங்களுடன் பயன்படுத்தக்கூடிய வகையில் புதிய சியெட் விவசாய டயர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்வேறு வகையான டிராக்டர்கள் மற்றும் விவசாயப் பணிகளுக்குத் தேவையான பரந்த அளவிலான பயன்பாட்டை இவை வழங்குகின்றன. இலங்கையின் விவசாயச் செயற்பாடுகளின் யதார்த்தங்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த டயர்கள், சேறு மற்றும் ஈரமான மண் நிலைகளில் சிறந்த இழுவைத்திறனையும் சீரான இயக்கத்தையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட டயர் தட வடிவமைப்பு, டயரில் படியும் சேறு மற்றும் மண்ணை விரைவாக வெளியேற்ற உதவுகிறது. இதனால் டயர்கள் தொடர்ந்து சீரான பிடிமானத்தைப் பேணுவதுடன், குறிப்பாக உழவு பணிகளை மேலும் திறம்படவும் எளிதாகவும் மேற்கொள்ள உதவுகின்றன.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மூன்று டயர்களும், உழவுப் பணிகளின்போது டிராக்டரின் இயந்திர சக்தியை மேலும் திறம்படப் பயன்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிக இழுவைத்திறனை வழங்குவதுடன், சக்கரங்கள் வழுக்கிச் சுழல்வதைக் குறைப்பதன் மூலம் டிராக்டரின் செயல்திறனை மேம்படுத்துகின்றன.மேலும், அதிக வலிமை கொண்ட கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளதால், கடினமான விவசாயப் பணிகளிலும் தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய வகையில் சிறந்த நீடித்துழைப்பு மற்றும் உறுதியை இந்த டயர்கள் வழங்குகின்றன.
புதிய டயர் வரிசை போட்டித்தன்மை கொண்ட விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், உற்பத்தி செய்யப்பட்ட வாரத்திலிருந்து மூன்று ஆண்டுகளுக்கான உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தீவிரமான விவசாயப் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த டயர்களில் முதலீடு செய்யும் விவசாயிகளுக்கு மேலதிக நம்பிக்கையும் உறுதியும் கிடைக்கிறது.
சியெட் வர்த்தகப் பெயர் இத்தாலியில் தோற்றம் பெற்றதாகும். இந்தியா மற்றும் ஜேர்மனியில் அமைந்துள்ள விரிவான ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை வசதிகளின் ஆதரவுடன் சியெட் தனது தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இலங்கையில் டயர் வர்த்தகப் பெயர்களில் அதிக பெறுமதியுடையதாக Brand Finance நிறுவனத்தால் சியெட் தரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், LMD நிறுவனத்தால் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் அதிகம் விரும்பப்படும் வர்த்தக நாமம் என்ற விருதையும் சியெட் பெற்றுள்ளது.
































