Oct 16, 2026 - 05:48 PM

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் குட் பேட் அக்லி.
மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி வெளியாகி இருந்தது. கடந்த வருடம் வெளியான விடாமுயற்சி படம் அஜித்திற்கு கைகொடுக்கவில்லை என்றாலும் குட் பேட் அக்லி தெறி மாஸாக ஓடியது.
இதில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில், ஜாக்கி ஷெராஃப் என பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். 250 கோடி ரூபாவுக்கு மேலான பட்ஜெட்டில் தயாரான இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியிருந்தது.
படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிய பிறகு சில பாடல்களின் Copyrights பிரச்சனையில் சிக்கியது.
அதேபோல் படம் ரிலீஸ் ஆகி 1 வருடத்திற்கு மேல் ஆனது ஆனால் படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்காமல் இருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை தமிழ் சினிமாவில் புதியதாக களமிறங்கியுள்ள SonyVizha தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
































