Oct 16, 2026 - 06:40 PM

ஜெயிலர் 2 திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஓவர்சீஸ் என அனைத்து ஏரியாக்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் பக்காவான வசூலை ஈட்டி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் 2 படத்தை தமிழ்நாட்டில் இன்பன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தையே ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், இன்பன் உதயநிதி ஜெயிலர் 2 வெற்றியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துக் கொண்டாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
இட்லி கடை படத்தில் இருந்து ரெட் ஜெயன்ட் மூவிஸை நிர்வாகம் செய்யும் பணியில் களமிறங்கினார் இன்பன் உதயநிதி. இந்த ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால், இதயம் முரளி, கட்டா குஸ்தி 2, டிசி, மண்டாடி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படமும் மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது.
குருவி படத்தில் தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலின் அறிமுகமாகி அதன் பின்னர் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் போது எப்படி இருந்தாரோ அதே போல இன்பன் உதயநிதி உள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்து படத்தின் வெற்றியை அறிவித்த இன்பன் உதயநிதியை தட்டிக் கொடுக்கும் ரஜினிகாந்தின் போட்டோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இன்பன் உதயநிதி.
































