Oct 20, 2026 - 03:53 PM

ஶ்ரீ லங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் அனுநாயகரும், கண்டி கெடம்பே ராஜோபவனாராம விகாராதிபதியுமான அதிவணக்கத்திற்குரிய கெப்பெட்டியாகொட சிறிவிமல நாயக்க தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (20)பிற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவரது பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் கண்டி கெடம்பே ராஜோபவனாராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், அன்னாரது மறைவால் துயருற்றுள்ள மகா சங்கத்தினருக்கும் விகாரையின் பரிபாலன சபைக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மத்திய மாகாண ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
































