Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

கால்நடை வளர்ப்பாளர்கள் சொல்லொணாத் துயரத்தில் இருக்கிறார்கள்!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

ஏடு தொடக்கல் நிகழ்வு!

மானம்பூ உற்சவம்

மானம்பூ உற்சவம்

பிரதி அமைச்சர் உறுதி!

பிரதி அமைச்சர் உறுதி!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

சகதியில் கடக்கும் மாணவர்கள்!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

அக்குறணையில் நடந்த கோர விபத்து!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

கடும் மழையால் நுவரெலியாவில் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மல்லாவியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காட்டு யானைகள்!

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மடு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் பலி! மூவர் காயம்

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுண் நகைகளைத் திருடிய நபர் சிக்கினார்

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுண் நகைகளைத் திருடிய நபர் சிக்கினார்

ஞானசார தேரர் கைதில் சிறுபான்மையினரை தொடர்புபடுத்துவது கவலையளிக்கிறது

ஞானசார தேரர் கைதில் சிறுபான்மையினரை தொடர்புபடுத்துவது கவலையளிக்கிறது

அக்குறணையை அரை மணி நேரத்தில் புரட்டி எடுத்த கனமழை!

அக்குறணையை அரை மணி நேரத்தில் புரட்டி எடுத்த கனமழை!

ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

ஜனாதிபதி தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

    Mobitel Inner 1278

    சென்னையில் வரும் நவ.25 ஆம் திகதி, தனது நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை நடிகர் தனுஷ் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


    இந்த சந்திப்பின்போது இயக்கத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


    நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் சமீபத்தில் அமைப்புரீதியான மாற்றத்திற்காக, நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டது. கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த நடவடிக்கை வந்தது.


    பெயர் மாற்றத்துடன், இயக்கத்திற்கான புதிய கொடி மற்றும் இலச்சினையும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.


    இந்நிலையில் இந்த பெண் நிர்வாகிகள் சந்திப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.


    நடிகர் விஜய் கட்சி தொடங்கி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலில் குதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


    நடிகர்களின் சமீபத்திய தீவிர ரசிகர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளே இந்த யூகங்களுக்கு வழிவகுத்தன. மேலும் இச்சந்திப்புகளின் போதான நடிகர் தனுஷின் பேச்சுகளும் அவ்வாறே அமைந்தன.


    இச்சூழலில் அமைப்புரீதியான மாற்றமும் இந்த யூகத்திற்கு மேலும் வலுசேர்த்தது. மேலும் நேற்று (19) தனுஷ் டெல்லி சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அக்.25 ஆம் திகதி நற்பணி இயக்கத்தின் பெண் நிர்வாகிகளை நடிகர் தனுஷ் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.


    இதனைத்தொடர்ந்து விரைவில் நடிகர் தனுஷ் கட்சித் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.