Oct 20, 2026 - 05:40 PM

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபரான பிரசன்ன ரணதுங்க நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இதற்கமைய, வழக்கை மீண்டும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
சுற்றுலாத்துறை அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் சுற்றுலா அதிகாரசபை உள்ளிட்ட நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்குக் காப்புறுதி வழங்கும் போது அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
































