Oct 20, 2026 - 05:30 PM

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்தார் .
இசையமைப்பாளர் தேவா, கடந்த 17 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து கடந்த 18 ஆம் திகதி தேவாவின் உடல் ஆற்காடு அருகே அவரது சொந்த ஊரான சக்கரமல்லூர் கிராமத்தில் அரசு மரியாதையுடன்நல்லடக்கம் செய்யப்பட்டது.
தேவா மறைந்த சமயத்தில் நடிகர் சூர்யா வெளியூரில் இருந்தார். இதனால் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அதேசமயம் சூர்யாவின் தந்தை, நடிகர் சிவகுமார் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் சென்னை வந்த சூர்யா, இசையமைப்பாளர் தேவாவின் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தேவாவின் மகன், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்தார்.
சூர்யா ஹீரோவாக அறிமுகமான ‘நேருக்கு நேர்’ படத்திற்கு இசையமைப்பாளர் தேவா தான் இசையமைத்து இருந்தார். தொடர்ந்து அவரின் ஓரிரு படங்களுக்கு தேவா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
































