Oct 20, 2026 - 05:14 PM

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைக் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் தொடர்பாக தற்போது சமூகத்தில் நிலவும் கருத்துக்கள் குறித்து இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தல் ஒன்றை மேற்கொண்டார்.
புதிய சட்டமூலத்தின் மூலம் முடி வளர்த்திருப்பது, பச்சைக் குத்தியிருப்பது போன்ற காரணங்களுக்காக ஒருவரைக் கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சமூகத்தில் வெளியாகும் கருத்துக்கள் தொடர்பாகவே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இதன்போது, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தனது முகநூல் பக்கத்தில் இந்த புதிய சட்டமூலம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்தும் அமைச்சர் தெளிவுபடுத்தியதுடன், ஒருவருக்கு இந்தச் சட்டமூலம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உயர் நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, உயர் நீதிமன்றம் குறித்த சட்டமூலம் தொடர்பாக ஒரு தீர்மானத்தை எடுக்கும் என்றும் அமைச்சர் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ,
"சாலிய பீரிஸ் புரிந்துகொள்ள வேண்டும்; ஒன்று அவருடன் இத்துறையில் பணியாற்றுபவர்கள் அல்லது அவருக்குக் கீழ் கல்வி கற்றவர்களை உள்ளடக்கியே இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்படுகிறது. அதனால், பச்சைக் குத்தியவர் அல்லது முடி வளர்த்தவர் ஒருவரை உள்ளே பிடித்து வைப்பார்கள் என்பது போன்ற ஒரு விடயத்தை இந்தச் சட்டமூலத்தில் சேர்க்க மாட்டார்கள் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். மற்றையது, அப்படி ஏதேனும் இருந்தால் யார் வேண்டுமானாலும் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று இதனை சவாலுக்கு உட்படுத்த முடியும். அதுவே சிறந்த விடயம். எனவே, இது குறித்து ஊடகங்களில் பேசுவதை விட உயர் நீதிமன்றத்திற்குச் சென்று சவாலுக்கு உட்படுத்துங்கள்; அப்போது அத்தகைய சரத்துகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும். சட்டமூலத்தை முழுமையாக ஒட்டுமொத்தமாகப் பாருங்கள்; மாறாக ஒன்று அல்லது இரண்டு விடயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவ்வாறு செய்ய உரிமை இல்லை. ஏனெனில், நாங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்து செய்த ஓர் அரசாங்கம். PTA வை இரத்து செய்துவிட்டு, அரசைக் பயங்கரவாதத்திலிருந்து தடுக்கும் சட்டமூலத்தைக் கொண்டுவருவதே மனித உரிமைகளையும் பாதுகாத்து, அரசைக் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதற்காகவே ஆகும்" எனத் தெரிவித்தார்.
































