Oct 20, 2026 - 04:08 PM

எஸ்டிஆர், அட்மேன் என்று கொண்டாடப்படுபவர் சிம்பு. சில வருடங்களுக்கு முன்பு அவரை பற்றி பெரும்பாலானவர்கள், இனி சிம்பு அவ்வளவுதான் என்று கருத்து தெரிவித்தார்கள்.
இப்போதோ அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கிறார்.
சிறு வயதிலிருந்தே நடித்துவரும் சிம்பு நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பின்னணி பாடகர், இயக்குநர், சிறந்த நடன கலைஞர் என பல திறமைகளை கொண்டிருப்பவர்.
கோலிவுட்டில் கமல் உள்ளிட்ட மிக சிறந்த நடிகர்களுக்கு பிறகு அதிக திறமைகளை கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர். தன்னை பற்றி யார் என்ன பேசினாலும் அதையெல்லாம் அசால்ட்டாக ஹேண்டில் செய்துவிட்டு அடுத்தக்கட்டத்துக்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவருக்கு இடையில் ஒரு காதல் தோல்வி ஏற்பட்டது. ஏற்கனவே முதல் காதலும் தோல்வியடைந்திருந்தது. இப்படி இரண்டு காதல்கள் முடிந்து போனதால் கொஞ்சம் அவரது கவனம் ஆன்மீகம் நோக்கி சென்றது.
இமயமலைக்கு எல்லாம் சென்று வந்தார். எனவே இனிமேல் சிம்பு திரைத்துறையில் தடம் பதிக்க முடியாது, அவரது இடத்துக்கு இன்னொருவர் வந்துவிடுவார் என்றெல்லாம ஆரூடங்கள் கூறப்பட்டன.
ஆனால் அந்த சீன்லாம் இங்கே இல்லை என்கிற ரீதியில் தனது அனைத்தையும் மாற்றி மாநாடு படத்தில் தரமான கம்பேக் கொடுத்தார். அந்தப் படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்தது. தொடர்ந்து நடித்த பத்து தல, வெந்து தணிந்தது காடு, தக் லைஃப் ஆகிய படங்களில் வெந்து தணிந்தது காடு மட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தக் லைஃப் படம் தோல்வியடைந்தாலும் அதில் சிம்புவின் நடிப்பு அட்டகாசமாக அமைந்துவிட்டது. அடுத்ததாக வெற்றிமாறன், அஸ்வத் மாரிமுத்து ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கிறார்.
இப்போது அரசன் பட ஷூட்டில் மும்முரமாக இருக்கிறார். படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. விஜய் சேதுபதி முக்கியமான கேரக்டரை ஏற்றிருந்த நிலையில் அவர் இப்போது விலகிவிட்டார். அரசன் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சிம்புவால் தொடர்ச்சியாக வேலை செய்ய முடியாது. அவருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னை இருக்கிறது. முக்கியமாக, வயிறில் பிரச்னை இருக்கிறது. ஆனால் படத்தில் அவர் சாப்பிடும்படியான காட்சி எடுத்தார்கள். அது ரீடேக் அதிகம் வாங்கிவிட்டது. ஒருகட்டத்தில் வயிறு பிரச்னை வந்துவிட்டது. இதை வெற்றிமாறனிடம் சொன்னால் ஷூட்டிங் பிரேக் ஆகும் என சிம்பு நினைத்தார். எனவே அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு நடிக்கிறார்" என்றார்.
































