Oct 21, 2026 - 10:31 AM

கெபெர்ஹாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில், அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி தலைவர் டெம்பா பவுமா அசத்தலாக ஆடி ஓட்டங்களை குவித்துள்ளார்.
இவருடன் ஆடிய ஆல்-ரவுண்டர் மார்கோ யான்சனும் முக்கியமான இன்னிங்ஸ் ஆடி, தென் ஆப்பரிக்க அணி மீண்டு வர உதவியதுடன், ஒரு புதிய சாதனையையும் படைத்தார்.
தென் ஆப்பிரிக்கா 110/6 என்ற நிலையில் தடுமாறி கொண்டிருந்தபோது, அணி தலைவர் டெம்பா பவுமா மற்றும் யான்சன் இணைந்து ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
ஸ்காட் போலண்டின் பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழப்பதற்கு முன்பு, யான்சன் 100 பந்துகளில் 85 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
யான்சென், பவுமாவுடன் ஏழாவது விக்கெட்டுக்கு 132 ஓட்டங்களை சேர்த்து, 110 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா மீண்டு வர உதவினார்.
சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டபோதிலும், யான்சனின் பங்களிப்பு, தென் ஆப்பிரிக்கா ஒரு இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வரவும், அவுஸ்திரேலிய பந்துவீச்சு தாக்குதலுக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கவும் உதவியது.
36 வயதான பவுமா தனது ஆட்டத்தின்போது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லையும் எட்டினார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) போட்டியில் சதம் அடித்த மிக வயதான அணி தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.
முன்னாள் இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா, 2023 ஆம் ஆண்டு நாக்பூரில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது 35 வயதில் சதம் அடித்து படைத்த சாதனையை இவர் முறியடித்தார்.
முந்தைய நாள் ஆட்ட முடிவில் 97/5 என்ற நிலையில் இருந்த தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது நாள் காலையில் மேலும் சரிந்து 110/6 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
அதன்பின் பவுமாவும், யான்சனும் ஆக்ரோஷத்தையும் பொறுமையையும் ஒருங்கே கையாண்டு, அணியின் நிலையை மீட்டு, ஆட்டத்தை சீராக்கினர்.
மதிய உணவு இடைவேளையின்போது, பவுமா 76 ஓட்டங்களுடனும், யான்சன் 72 ஓட்டங்களுடனும், களத்தில் இருக்க, தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்களை எட்டியிருந்தது.
பவுமா தனது வாழ்நாள் சிறந்த டெஸ்ட் ஸ்கோரான 179 ஓட்டங்களை எடுத்தார், அதே நேரத்தில் சைமன் ஹார்மர் 82 ஓட்டங்களை பங்களித்ததால், தென் ஆப்பிரிக்கா 425/9 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா வலுவான பதிலடி கொடுத்த நிலையில், அவுஸ்திரேலியா தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 3 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் ஆட்ட நேரத்தை நிறைவு செய்தது.
































