Oct 21, 2026 - 12:01 PM

பிரான்ஸின் முதன்மையான வாகன வர்த்தக நாமமான Renault, Associated Motorways (AMW) நிறுவனத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக மீண்டும் இலங்கைச் சந்தையில் கால்பதித்துள்ளது. இந்த மீள்வருகையைக் குறிக்கும் வகையில், Kwid, Triber மற்றும் Kiger ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தனித்துவமான வடிவமைப்பு, நவீன தொழில்நுட்பம் மற்றும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, புதியதொரு வாகன அனுபவத்தை வழங்க Renault தயாராகியுள்ளது.
Monarch Imperial ஹோட்டலில் நடைபெற்ற பிரம்மாண்ட அறிமுக விழாவில், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாண்புமிகு Rémi Lambert, Al-Futtaim Automotive நிறுவனத்தின் Emerging & International பிரிவின் உப தலைவர் Antoine Barthez, AMW குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Jawahar Ganesh, AMW விற்பனைப் பணிப்பாளர் Prasanna de Silva, Renault நிறுவனத்தின் தயாரிப்புத் திட்டமிடல் பணிப்பாளர் Matthieu Baron உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் உரையாற்றிய AMW குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Jawahar Ganesh, Renault மீண்டும் இலங்கைச் சந்தைக்கு வருவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். Renault இன் தனித்துவமான வடிவமைப்பையும்
வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பெறுமதியையும் நவீன தொழில்நுட்பம், விரிவான விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் நீண்டகால வாடிக்கையாளர் பராமரிப்பு ஆகியவற்றுடன் இணைத்து, முழுமையான வாகன உரிமையாளர் அனுபவத்தை வழங்க AMW உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாண்புமிகு Rémi Lambert, Renault மீண்டும் இலங்கைக்கு வருவதை வரவேற்றதுடன், பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் பிரெஞ்சு நிறுவனங்கள் ஆற்றும் பங்களிப்பையும் பாராட்டினார். Antoine Barthez அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, இலங்கைச் சந்தையில் Renault மீண்டும் பிரவேசிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
ரூ. 6.69 மில்லியன் முதல் விலையில் மூன்று மாடல்கள் – ஏழு தெரிவுகள் Renault நிறுவனத்தின் தயாரிப்புத் திட்டமிடல் பணிப்பாளர் Matthieu Baron மற்றும் Renault விற்பனைத் தலைவர் Ram Gomathinayagam ஆகியோர் புதிய வாகனத் தெரிவுகளை அறிமுகப்படுத்தினர். மொத்தம் ஏழு வகைகளை உள்ளடக்கிய இத்தெரிவுகளின் விலைகள், பெறுமதி சேர் வரி (VAT) உட்பட, பின்வருமாறு அமைந்துள்ளன.
* Renault Kwid Evolution MT: ரூ. 6,690,000
* Renault Kwid Climber AMT: ரூ. 6,990,000
* Renault Kiger Evolution AMT: ரூ. 8,190,000
* Renault Kiger Tekno AMT: ரூ. 8,850,000
* Renault Kiger Emotion CVT: ரூ. 10,590,000
* Renault Triber Evolution MT: ரூ. 8,190,000
* Renault Triber Emotion AMT: ரூ. 9,190,000
Renault Kwid, உலகளாவிய சந்தையில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. 15க்கும் மேற்பட்ட சந்தைகளில் ஒரு
மில்லியனுக்கும் அதிகமான Kwid வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையில் மாத்திரம் 5,000க்கும்
மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
குடும்பங்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற வகையில் இடவசதியையும் நடைமுறைப் பயன்பாட்டையும் வழங்கும் Renault Triber, உலகளவில் 200,000க்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதேவேளை, SUV ரக வாகனங்களின் கம்பீரமான தோற்றத்தையும் தனித்துவமான வீதித் தோற்றத்தையும் கொண்ட Renault Kiger, உலகளவில் 100,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகியுள்ள வெற்றிகரமான மாடலாகத் திகழ்கிறது.
அறிமுகப்படுத்தப்பட்ட ஏழு வகைகளில் ஆறு வகைகள் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்குத் தயாராக
உள்ளன.
முழுமையான வாகன உரிமையாளர் அனுபவத்திற்கான உறுதிமொழி
Renault வாகன உரிமையாளர்களுக்கு நம்பிக்கையையும் திருப்தியையும் அளிக்கும் முழுமையான அனுபவத்தை
வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை AMW மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மூன்று ஆண்டுகள் அல்லது 100,000 கிலோமீற்றர் வரை — இவற்றில் எது முதலில் நிறைவடைகிறதோ அதுவரை — முழு வாகனத்தையும் உள்ளடக்கும் உற்பத்தியாளர் உத்தரவாதம், பிரத்யேக விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் அறிமுகக் காலப்பகுதிக்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் வழங்கப்படுகின்றன.
AMW நிறுவனத்தின் விற்பனைப் பணிப்பாளர் Prasanna de Silva கூறியதாவது:
“Renault ஐ மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவருவது என்பது ஒரு வாகனத்தை விற்பனை செய்வதுடன் முடிவடையும்
செயற்பாடு அல்ல. வாடிக்கையாளர் வாகனத்தை வாங்கிய பின்னரும் அவருக்குத் தொடர்ச்சியான ஆதரவையும் சிறந்த
அனுபவத்தையும் வழங்குவது எமது பொறுப்பாகும். உத்தரவாதப் பாதுகாப்பு, நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறை ஆகியவற்றின் மூலம், Renault உரிமையாளர்கள் தமது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்பிக்கையுடன் இருக்க உதவுவதே எமது நோக்கமாகும்.” இந்த அறிமுக விழா, Renault வாகனங்களின் முதல் வாடிக்கையாளர் ஒப்படைப்புகளையும் சிறப்பித்தது. திரு. Nishantha Amaratunga மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், திரு. M. Sri Nagendran மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் Renault Triber வாகனங்கள் வழங்கப்பட்டன. முதல் Renault Kiger வாகனம் திரு. Thushara Jayawardena மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், முதல் Renault Kwid வாகனம் திரு. Dananjaya மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.
AMW உடன் Renault அனுபவத்தைப் பெற்றிடுங்கள்
புதிய Renault வாகனங்களை நேரில் பார்வையிடவும், சோதனை ஓட்டங்களை முன்பதிவு செய்யவும் வாடிக்கையாளர்கள் பின்வரும் நிலையங்களுக்கு வருகை தரலாம்.
* Renault Borella Flagship Showroom: வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை;
சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை.
* Renault Experience Centre, Majestic City: தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
இரு இடங்களிலும் சோதனை ஓட்ட வசதிகள் கிடைக்கின்றன.
வாகன மாடல்கள், விலைகள், கிடைக்கும் தன்மை மற்றும் உரிமையாளர் சலுகைகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.renault.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது 0117 609 609 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும்.
1898ஆம் ஆண்டு பிரான்ஸில் நிறுவப்பட்ட Renault, 125 ஆண்டுகளுக்கும் மேலான வாகன உற்பத்தி பாரம்பரியத்துடன்
இலங்கைக்குத் திரும்பியுள்ளது. சர்வதேச அளவில் பெற்ற அனுபவத்தையும் பாரம்பரியத்தையும், AMW நிறுவனத்தின் உள்ளூர் வாகனத் துறை நிபுணத்துவம் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆதரவுடன் இணைப்பதன் மூலம், இலங்கை
வாடிக்கையாளர்களுக்கு புதியதொரு அனுபவத்தை வழங்க Renault எதிர்பார்க்கிறது.
AMW உடன் Renault மீண்டும் இலங்கையில். ஒரு புதிய பயணம் ஆரம்பமாகிறது.
































