Oct 21, 2026 - 12:07 PM

ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் ஓய்வூதியர்களின் விலைமதிப்பற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும்
நாட்டிற்கான அவர்களின் வாழ்நாள் பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரித்து DFCC வங்கி அவர்களைக் கௌரவிக்கிறது.
அரச நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மூலம் நாட்டிற்குச் சேவையாற்றியுள்ள ஓய்வூதியர்கள், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றனர். ஓய்வுக்குப் பின்னரும் கூட, அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு ஆதரவளித்தல், இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டுதல், சமூகத்திற்குப் பங்களித்தல் மற்றும் நாட்டின் முன்னேற்றத்தில் தீவிர பங்காற்றுதல் ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
ஓய்வு என்பது இலட்சியங்களின் முடிவு அல்ல, மாறாக தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட இலக்குகள், குடும்ப முன்னுரிமைகள் மற்றும் நீண்டகால அபிலாஷைகளை கண்ணியத்துடனும் நம்பிக்கையுடனும் தொடர்ந்து முன்னெடுக்கும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமே என்று DFCC வங்கி நம்புகிறது. இதற்கிணங்க, ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள், தாரமிழந்தவர்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கான பிரத்தியேக ஓய்வூதியக் கடன் திட்டமாக DFCC Garusaru உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மருத்துவச் செலவுகள், வீட்டை மேம்படுத்துதல், குடும்பக் கடமைகள், கல்விக்கான ஆதரவு மற்றும் தனிப்பட்ட திட்டங்கள் போன்ற முக்கிய தேவைகளை நிறைவேற்ற அவர்களுக்கு உதவுகிறது.
DFCC Garusaru மூலம், தகுதியுள்ள ஓய்வூதியர்கள் 12 மில்லியன் ரூபா தொகை வரையிலான கடன் வசதிகளைப் பெறலாம். இத்திட்டம் 15 ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் காலம், கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் மற்றும் எளிமையான ஆவண நடைமுறைகளை வழங்குகிறது. தகுதி மற்றும் வங்கியின் கடன் வழங்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வசதியான மாதாந்தத் தவணைகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான திட்டமிடலுடன், நிலையான மற்றும் மாறுபடும் வட்டி வீதத் தெரிவுகளையும் இது வழங்குகிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்குத் துணையாக நிற்கும் ஒரு வங்கியாக, DFCC வங்கி இலங்கையின் ஓய்வூதியர்களுக்கு ஒரு நம்பகமான நிதிசார் பங்காளியாகத் தொடர்ந்து திகழ்கிறது. ஓய்வூதியர்கள் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லவும், தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றவும், மற்றும் ஓய்வுக்குப் பிறகும் தாங்கள் விரும்பும் வாழ்க்கையைத் தொடர்ந்து கட்டியெழுப்பவும் அவர்களை வலுப்படுத்துவதில் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை DFCC Garusaru பிரதிபலிக்கிறது.
இந்த ஓய்வூதியர் தினத்தில், நாட்டிற்காக அவர்கள் ஆற்றிய நீண்டகாலச் சேவைகளுக்காக அனைத்து ஓய்வூதியர்களுக்கும் DFCC வங்கி தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது. அத்துடன், மரியாதை, அக்கறை மற்றும் நிதிசார் நம்பிக்கையுடன் அவர்களின் பயணத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.
































