Oct 21, 2026 - 12:23 PM

SLT-MOBITEL இன் கல்விப் பிரிவான SLT-MOBITEL Nebula Institute of Technology, கொழும்பு
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற EDEX Mid‑Year Expo 2026
கண்காட்சியில் பங்கேற்றது. இலங்கையின் முன்னணி உயர்கல்விக் கண்காட்சிகளுள் ஒன்றாக
அங்கீகரிக்கப்பட்ட EDEX, கல்வி மற்றும் தொழில்முறை வெற்றிக்கான வழிகளைத் தேடும் எதிர்கால
மாணவர்கள், பெற்றோர் மற்றும் தொழிற்துறை நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
Discover the Future of Education என்பது EDEX 2026 கண்காட்சியில் Nebula Institute முன்வைத்த
பிரதான கருப்பொருளாகும். உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தகைமைகள், தொழில்
வழிகாட்டல்கள் மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான நம்பிக்கையாக பிரவேசிப்பதற்கு
வாய்ப்பளிக்கும் தனது பங்கை அது இதன் மூலம் வெளிப்படுத்தியது.
மேலும், எதிர்கால மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில்
Nebula Institute தனது தனித்துவமான சிறப்பம்சங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளத்தை
இக்கண்காட்சி வழங்கியது. ஆர்வமுள்ள பெற்றோர்களும் மாணவர்களும் தொழில்
வழிகாட்டல்களை ஆராய்வதற்கும் கல்வி நிபுணர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கும்
இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்ததுடன், SLT-MOBITEL ஊடாக நேரடியாகப் பெறக்கூடிய
தொழிற்துறைப் பயிற்சி வாய்ப்புகளைக் கண்டறியவும் வருகையாளர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டது. இது கல்விசார் கற்றலுடன் இணைந்து நடைமுறை சார்ந்த அனுபவத்தையும்
உறுதிசெய்கிறது.
நிகழ்வில், Nebula Institute மாணவர்களுடனும் பெற்றோர்களுடனும் நேரடியாகக்
கலந்துரையாடியதுடன், தமது பாடநெறித் திட்டங்கள் எதிர்கால தொழிற்சந்தையின்
தேவைகளுக்கு எவ்வாறு இணையாக அமைந்துள்ளன என்பதையும், உள்ளூர் மற்றும் சர்வதேச
வாய்ப்புகளுக்கு ஏற்ற திறன்களுடன் பட்டதாரிகளை எவ்வாறு தயார்படுத்துகின்றன என்பதையும்
எடுத்துக் காட்டியது.
Nebula Institute ஊடாக மாணவர்கள், University of Hertfordshire, UK இல் நேரடி இணைப்பைக்
கொண்ட கௌரவப் பட்டப்படிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட
தகைமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். EDEX Mid-Year Expo கண்காட்சியில், மின்சார மற்றும்
மின்னணுவியல் பொறியியலில் BEng (Hons) கௌரவப் பட்டம், ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை
நுண்ணறிவில் BEng (Hons) கௌரவப் பட்டம் மற்றும் தரவு அறிவியலில் BSc (Hons) கௌரவப்
பட்டம் உள்ளிட்ட தனது பலதரப்பட்ட கல்விசார் பாடநெறித் திட்டங்களை SLT-MOBITEL Nebula
Institute காட்சிப்படுத்தியிருந்தது.
London South Bank University கணினி அறிவியலில் (செயற்கை நுண்ணறிவு) BSc (Hons) கௌரவப்
பட்டம், கணினி அறிவியலில் (சைபர் பாதுகாப்பு) BSc (Hons) கௌரவப் பட்டம் மற்றும் மின்சார
மற்றும் மின்னணுவியல் பொறியியலில் BSc (Hons) கௌரவப் பட்டம் உள்ளிட்ட மேல்நிலை
நிலைப் பட்டப்படிப்புத் திட்டங்களை Nebula Institute ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
Pearson சர்வதேச தகைமைகளுள், மின்சார மற்றும் மின்னணுவியல் பொறியியலில் BTEC மட்டம் 5 HND, டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் BTEC மட்டம் 5 HND, கணினியியலில் BTEC மட்டம் 5 HND மற்றும் பொறியியலில் BTEC சர்வதேச மட்டம் 3 அடிப்படை டிப்ளோமா ஆகியவை உள்ளடங்குகின்றன. அத்துடன், பயன்பாட்டுத் தகவல் தொழில்நுட்பச் சான்றிதழ் மற்றும் NVQ மட்டம் 4 தொலைத்தொடர்பு தொழில்நுட்பவியலாளர் Optical Fiber கற்கைகள், வலையமைப்பு பாதுகாப்பு கற்கைகள் CompTIA செக்யூரிட்டி+ (SYO - 601) ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் Nebula Institute ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இப்பாடநெறிகளின் தொகுப்பு, கல்விசார் சிறப்பு மற்றும் சர்வதேச அளவிலான வாய்ப்புகளுக்கான SLT - MOBITEL Nebula Institute இன் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. அத்துடன், க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 30% வரையான புலமைப்பரிசில்களையும் Nebula Institute வழங்குகின்றது. இது தகுதியான மாணவர்களுக்கு உயர்கல்வியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கிறது. மேலும், தொழிற்துறை முன்னேற்றம் மற்றும் சர்வதேச அனுபவங்களுக்கான கதவுகளைத் திறக்கும் வகையில் உலகளாவிய புலம்பெயர்வு வழிகாட்டல்களையும் Nebula Institute வலியுறுத்துகிறது. வளர்ந்து வரும் தொழில்ச்சந்தைகளுக்கு ஏற்ற வகையில் பட்டதாரிகளைத் தயார்படுத்துவதில் உள்ள தனது அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
அனைத்துப் பாடநெறிகளும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்டதுடன், வெலிசர, கண்டி மற்றும் மொரட்டுவ ஆகிய இடங்களிலுள்ள Nebula Institute இன் மூன்று வளாகங்களில் கற்பிக்கப்படுகின்றன. இது நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களுக்குப் நம்பகத்தன்மையையும் இலகுவான அணுகல் வசதியையும் வழங்குகின்றது. SLT‑MOBITEL Nebula Institute of Technology’இன் கற்கைகள் மற்றும் இணைந்து கொள்ளும் வாய்ப்புகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு பார்வையிடவும் www.nebula.edu.lk, மின்னஞ்சல்
வாயிலாக தொடர்பு கொள்வதற்கு info@nebula.edu.lk, அல்லது அழைக்கவும் 0112162162 / 0112645371 / 0812388500.
































