Oct 21, 2026 - 01:12 PM
By அம்பாறை நிருபர் ஷிஹான்
By அம்பாறை நிருபர் ஷிஹான்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை காவல் துறைப் பிரிவிற்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் யானை ஒன்று சேற்றுக்குள் சிக்கி உயிருக்குப் போராடி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த யானையின் நிலைமையை உடனடியாக ஆராய்ந்து, அதன் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வயல்வெளிச் சேற்றுக்குள் சரிந்து கிடக்கும் இந்த யானை தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் கால்நடை வைத்தியக் குழுவினரும் உடனடி கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.
எனவே, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, யானையைச் சேற்றிலிருந்து மீட்டுப் பாதுகாப்பதுடன், அதற்குரிய அவசர சிகிச்சைகளையும் அளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
































