Oct 21, 2026 - 01:10 PM

ஹட்ச் [HUTCH] நிறுவனமானது இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் புத்தாக்கத் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில், ‘IgnitX 2026’ எனும் நாடளாவிய புத்தாக்கச் சவாலை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையின் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் இளம் புத்தாக்குனர்கள் வாடிக்கையாளர் சேவையின் எதிர்காலம் - டிஜிட்டல் புத்தாக்கத்தின் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மீள்வரையறை செய்தல் என்ற தொனிப்பொருளின் கீழ் டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குவதற்கு இச்சவால் அழைப்பு விடுக்கிறது.
ஹட்ச் நிறுவனமானது இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுடன் நீண்டகாலமாகப் பேணி வரும் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் மற்றுமொரு முயற்சியாக IgnitX 2026 அமைந்துள்ளது. கடந்த காலங்களில் தலைமைத்துவ ஆற்றலை மேம்படுத்தும் வழிகாட்டல் திட்டங்கள், அத்தியாவசியத் திறன்களை வளர்ப்பதற்கான செயலமர்வுகள், இளங்கலை மாணவர்களின் கல்விசார் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் கள விஜயங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடனான பங்குடைமைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இந்தத் தொடர் முயற்சிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், இலங்கையின் அடுத்த தலைமுறை புத்தாக்கத் திறனாளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறன்களை வளர்ப்பதற்கும், அவர்களுடன் நேரடியாக இணைந்து செயற்படுவதற்கும் IgnitX 2026 ஒரு பிரத்தியேகத் தளத்தை ஹட்ச் நிறுவனத்துக்கு வழங்குகிறது.
இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 50 அணிகள் இப்புத்தாக்கச் சவாலில் பங்கேற்றன. நிஜ வாழ்க்கையில் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் வகையில், வாடிக்கையாளர் தேவைகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தீர்வுகளை இவ்வணிகள் உருவாக்கின. தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விளக்க அமர்வுகள், ஆலோசனை முன்வைப்புகள் மற்றும் மதிப்பீடுகளின் பின்னர், ஆறு அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டன. இவ்வணிகள் தமது முன்மாதிரித் தீர்வுகளை உருவாக்கி, அவற்றைச் சமர்ப்பித்து விளக்குவதற்கான இறுதிச் சுற்று ஒக்டோபர் 5ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.இதில், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் (IIT) சேர்ந்த அணி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றன.
வெற்றி பெற்ற IIT அணியான Zeptaz சார்பில் கருத்துத் தெரிவித்த டெவின் சில்வெஸ்டர் தனது அணியைச் சேர்ந்த நவீன் ஹரி, ஜயித் விஜேதுங்க மற்றும் ஓஜித் ஆதித்யா ஆகியோருடன் இணைந்து இப்போட்டியில் பங்கேற்ற அனுபவம் குறித்துப் பின்வருமாறு தெரிவித்தார்:“IgnitX 2026 போட்டியில் பங்கேற்றமையானது எமது அணிக்கு சவால்கள் நிறைந்த, அதேவேளை மிகுந்த பயனளித்த அனுபவமாக அமைந்தது. இப்போட்டி எமக்கு ஊக்கமளிப்பதாகவும் புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள உதவுவதாகவும் இருந்தது. எமக்குக் கிடைத்த வழிகாட்டலும் பின்னூட்டங்களும் எமது புத்தாக்கத் தயாரிப்பையும் அதனை முன்வைக்கும் விதத்தையும் மேலும் செம்மைப்படுத்த உதவின. வாழ்க்கையில் யதார்த்தமாக ஏற்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு,
சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் தீர்வுகளை உருவாக்குவதில் எமது நம்பிக்கையை இப்போட்டி மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதேவேளை, எளிதில் கிடைக்கப்பெறாத பெறுமதிமிக்க தொழில்துறை அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. இத்தகைய சிறந்த வாய்ப்பை வழங்கிய ஹட்ச் நிறுவனத்துக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.”
இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 50 அணிகள் இப்புத்தாக்கச் சவாலில் பங்கேற்றன. நிஜ வாழ்க்கையில் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் வகையில், வாடிக்கையாளர் தேவைகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தீர்வுகளை இவ்வணிகள் உருவாக்கின.தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விளக்க அமர்வுகள், ஆலோசனை முன்வைப்புகள் மற்றும் மதிப்பீடுகளின் பின்னர், ஆறு அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டன. இவ்வணிகள் தமது முன்மாதிரித் தீர்வுகளை உருவாக்கி, அவற்றைச் சமர்ப்பித்து விளக்குவதற்கான இறுதிச் சுற்று ஒக்டோபர் 5ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது. இதில், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் (IIT) சேர்ந்த அணி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றன.
வெற்றி பெற்ற IIT அணியான Zeptaz சார்பில் கருத்துத் தெரிவித்த டெவின் சில்வெஸ்டர் தனது அணியைச் சேர்ந்த நவீன் ஹரி, ஜயித் விஜேதுங்க மற்றும் ஓஜித் ஆதித்யா ஆகியோருடன் இணைந்து இப்போட்டியில் பங்கேற்ற அனுபவம் குறித்துப் பின்வருமாறு தெரிவித்தார்:“IgnitX 2026 போட்டியில் பங்கேற்றமையானது எமது அணிக்கு சவால்கள் நிறைந்த, அதேவேளை மிகுந்த பயனளித்த அனுபவமாக அமைந்தது. இப்போட்டி எமக்கு ஊக்கமளிப்பதாகவும் புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள உதவுவதாகவும் இருந்தது. எமக்குக் கிடைத்த வழிகாட்டலும் பின்னூட்டங்களும் எமது புத்தாக்கத் தயாரிப்பையும் அதனை முன்வைக்கும் விதத்தையும் மேலும் செம்மைப்படுத்த உதவின. வாழ்க்கையில் யதார்த்தமாக ஏற்படும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு,
சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் தீர்வுகளை உருவாக்குவதில் நாம் கொண்டுள்ள தன்னம்பிக்கையை இப்போட்டி மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதேவேளை, எளிதில் கிடைக்கப்பெறாத பெறுமதிமிக்க தொழில்துறை அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. இத்தகைய சிறந்த வாய்ப்பை வழங்கிய ஹட்ச் நிறுவனத்துக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”
ஹட்ச் நிறுவனத்தின் IgnitX திட்டமானது ஆண்டுதோறும் நடத்தப்படவுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தமது புத்தாக்கமான டிஜிட்டல் தீர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், இலங்கையில் வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பத் துறையில் தமது பயணத்தை ஆரம்பிப்பதற்கும் தொடர்ச்சியானதொரு தளத்தை இத்திட்டம் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளது.
































