Oct 21, 2026 - 12:35 PM

சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் விதமாக, SDB வங்கி, Ocean University of Sri Lanka-இன் ZeroPlastic Club உடன் இணைந்து செயல்படுத்தப்படும் சூழல் அமைப்பிற்கு உயிரூட்டுதல் என்ற Project BLUE முன்னெடுப்பின் சமீபத்திய கட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. தொடந்துவவில் நடைபெற்ற தொடக்க நிகழ்வின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இந்த முன்னெடுப்பு திருகோணமலைக்கு விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேற்றியல் அபிவிருத்தி இலக்குகள் பலவற்றுக்கு ஆதரவளிப்பதோடு, அதன் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் சமூகத் தாக்கமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
Project BLUE உடனான தனது கூட்டாண்மை மூலம், SDB வங்கி தனது நிலைபேற்றியல் மற்றும் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு உறுதிமொழிகளுக்கு இணங்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது விழிப்புணர்வு மற்றும் சமூக வலுவூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் பங்களிக்கிறது. இந்த முன்னெடுப்பு, நிலைபேற்றியல் சார்ந்த நடைமுறைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், கடல் மாசுபாட்டைக் கையாள்வதற்காகப் பங்குதாரர்களை ஒன்றிணைப்பதன் மூலம், SDG 8 (கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி), SDG 13 (காலநிலை நடவடிக்கை), SDG 14 (நீரடி உயிர் வாழ்வு) மற்றும் SDG 17 (இலக்குகளுக்கான கூட்டாண்மை) ஆகிய அபிவிருத்தி இலக்குகளுக்கு ஆதரவளிக்கிறது.
தொடந்துவ கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட Project BLUE முன்னெடுப்பின் முதல் கட்டமானது, கடற்கரை மற்றும் நீருக்கடியில் தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக SDB வங்கியின் தன்னார்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சுழியோடல் வல்லுநர்களை ஒன்றிணைத்தது. அத்துடன், கடல் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்திக் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பத்தேகமவில் உள்ள புனித அந்தோனியார் தேசியக் கல்லூரியின் மாணவர்களும், இலங்கையின் நீலச் சூழல் மண்டலங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் கல்வி அமர்வுகளில் பங்கேற்றனர்.
இதனை அத்திவாரமாகக் கொண்டு, அதன் வளமான கடல் பல்லுயிர்ப் பெருக்கம், செழிப்பான மீன்பிடித் தொழில் மற்றும் சுற்றுலாத் தலமாக அதன் முக்கியத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட பகுதியான திருகோணமலையில் இரண்டாம் கட்டம் நடத்தப்பட்டது.
இத்திட்டம், கடற்கரை மற்றும் நீருக்கடியில் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 75- க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர் தன்னார்வலர்கள், 50-க்கும் மேற்பட்ட SDB வங்கிப் பணியாளர் தன்னார்வலர்கள் மற்றும் 10 தொழில்முறை சுழியோடிகளை ஒன்றிணைத்தது. தன்னார்வலர்கள் 200 கிலோவுக்கும் அதிகமான கடல் குப்பைகளைச் சேகரித்து, எளிதில் பாதிப்படையக்கூடிய கடல் வாழ்விடங்களை மீட்டெடுக்கவும், கடல் சூழல் மண்டலங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவினர். இத்திட்டம், சுற்றுச்சூழல் நிலைபேற்றியல், சமூக நல்வாழ்வு மற்றும் நீண்டகாலப் பொருளாதார மீள்திறன் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை எடுத்துரைக்கும் வகையில், உள்ளூர் சமூகத்தினருக்காக நிதி மற்றும் டிஜிட்டல் அறிவு விழிப்புணர்வு அமர்வுகளையும் அறிமுகப்படுத்தியது.
இந்த முன்னெடுப்பு குறித்து கருத்து தெரிவித்த SDB வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மனோஜ் அக்மீமன, “நிலையான தாக்கத்தை உருவாக்குவதில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை Project BLUE எடுத்துக்காட்டுகிறது. Ocean University of Sri Lanka மற்றும் பிற பங்குதாரர்களுடனான எங்கள் கூட்டாண்மை மூலம், அறிவுப் பகிர்வு, விழிப்புணர்வு மற்றும் கூட்டு நடவடிக்கை ஆகியவற்றின் வழியாக சமூகங்களுக்கு ஆதரவளிப்பதோடு, இலங்கையின் கடல்சார் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் பங்களித்து வருகிறோம். இதுபோன்ற கூட்டாண்மைகள், சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதிலும், வருங்கால சந்ததியினருக்கு மேலும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு
வகிக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
Project BLUE முன்னெடுப்பிற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதன் மூலம், SDB வங்கியானது பாரம்பரிய வங்கிச் சேவைகளுக்கு அப்பாற்பட்ட, அர்த்தமுள்ள நிலைபேற்றியல் முயற்சிகளுக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. இது சமூகங்களுக்கு நேர்மறையான மதிப்பை உருவாக்குவதோடு, இலங்கையின் கடல்சார் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் பங்களிக்கிறது.
SDB வங்கி பற்றிய விபரங்கள்
ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட மற்றும்
விரிவான ஆதரவை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படும், எதிர்காலத்திற்குத் தயாரான
வங்கியான SDB வங்கி, இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட உரிமம் பெற்ற
ஒரு சிறப்பு வங்கியாகும். இது கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில்
பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் Fitch Ratings நிறுவனத்தால் BB+(lka) எனத் தரமதிப்பீடு
செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய தனது 93 கிளைகளின் வலையமைப்பு மூலம், இந்த வங்கி
நாடு முழுவதும் உள்ள தனது தனிநபர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கூட்டுறவு மற்றும்
வணிக வங்கி வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை வழங்குகிறது.
சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் கோட்பாடுகள் SDB வங்கியின் நெறிமுறைகளில்
ஆழமாக வேரூன்றியுள்ளன. நிலைபேற்றியல் சார்ந்த நடைமுறைகள் மூலம் உள்ளூர்
சமூகங்களையும் வணிகங்களையும் மேம்படுத்துவதில் இது உறுதியான கவனம்
செலுத்துகிறது. இலங்கையை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கில்,
வங்கியானது பெண்களுக்கு அதிகாரமளித்தல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின்
நிலையான வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் குறிப்பாக
உறுதிபூண்டுள்ளது.
































