Oct 21, 2026 - 12:28 PM

அத்தியாவசிய பாடசாலை உபகரணங்கள் முதல் நவீன வசதிகள் படைத்த ஸ்மார்ட் வகுப்பறை வரை சிறுவர்களுக்கான உள்ளடக்கமான கல்வி மற்றும் டிஜிட்டல் பயிலல் வாய்ப்புகளை SLT-MOBITEL மேம்படுத்துகின்றது
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான நலத்திட்டங்களின் ஊடாக,
உள்ளடக்கிய கல்வியை மேம்படுத்துவதற்கும் அடுத்த தலைமுறையை வலுப்படுத்துவதற்குமான தனது
அர்ப்பணிப்பை SLT-MOBITEL மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. கலவான காமினி ஆரம்பப் பாடசாலை
மற்றும் வத்தளை, வெலிகடமுல்ல சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 1,000க்கும்
மேற்பட்ட மாணவர்கள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளதுடன், இத்திட்டங்கள் தொழினுட்ப வழி கற்றலையும்
அத்தியாவசிய கல்விசார் உதவிகளையும் ஒருங்கிணைத்து, சிறுவர்கள் கற்றுக் கொள்ளவும், வளரவும்,
அவர்களின் முழுத் திறனை அடையவும் வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்றன.
இலங்கையின் கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை
வலுப்படுத்தும் வகையில், கலவான காமினி ஆரம்பப் பாடசாலைக்கு அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறை வசதியை
SLT-MOBITEL நன்கொடையாக வழங்கியுள்ளது. அதிவேக SLT-MOBITEL ஃபைபர் இணைப்பு மற்றும் நவீன
ஊடாடும் ஸ்மார்ட் போர்ட் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ள இவ்வசதி, நவீன டிஜிட்டல் கற்றல்
ஆற்றல்களை வகுப்பறைக்குள் அறிமுகப்படுத்தி, வளமிக்க மற்றும் ஊடாடும் கற்றல் சூழலை உருவாக்குகிறது.
டிஜிட்டல் கற்றல் தளங்கள், ஊடாடும் கல்விச் உள்ளடக்கங்கள் மற்றும் ஏராளமான இணையவழிக் கல்வி வள
அணுகல் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் 900 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்
இவ்வசதி பயன்பெறச் செய்கிறது. நம்பகமான இணைய இணைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்தை
அன்றாடக் கற்பித்தலில் ஒருங்கிணைப்பதன் மூலம், இத்திட்டம் கற்றல் அனுபவங்களை மேம்படுத்துவதுடன்,
வகுப்பறை ஊடாட்டத்தை ஊக்குவித்து, டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. மேலும்,
கிராமப்புற மாணவர்களுக்குப் புதிய கல்வி வாய்ப்புகளை எளிதில் கிடைக்கச் செய்கிறது.
வத்தளை, வெலிகடமுல்ல சித்தார்த்த வித்தியாலயத்தைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு SLT-MOBITEL
அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த
மாணவர்களை கற்றல் சூழலில் ஒன்றிணைக்கும் இப்பாடசாலை, உள்ளடக்கிய கல்விக்கான முக்கிய
அடித்தளத்தை வழங்குகிறது. மாணவர்களின் அன்றாடக் கற்றல் தேவைகளுக்கு ஆதரவளிப்பதுடன்,
அவர்களின் கல்வி அனுபவங்களை மேம்படுத்தி, கல்விசார் இலக்குகளைத் தொடர்வதற்கு அவர்களை
ஊக்குவிப்பது இந்நன்கொடையின் நோக்கமாகும்.
உடனடி கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், பாடசாலையின் தொடர்ச்சியான தேவைகளை பூர்த்தி
செய்யவும் கற்றல் சூழலை மேம்படுத்தவும் பரந்த சமூகத்தினரதும் நலன்விரும்பிகளினதும் ஆதரவை
பாடசாலை தொடர்ந்து எதிர்பார்க்கிறது. இது மாணவர்களின் நீண்டகால வளர்ச்சிக்குச் சிறந்த வாய்ப்புகளை
உருவாக்க வழிவகுக்கும்.
இவ்முயற்சிகள் ஊடாக, டிஜிட்டல் கற்றலுக்கான அணுகலை விரிவுபடுத்தி, அத்தியாவசிய கல்வித்
தேவைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இலங்கையின் இளைய தலைமுறையினரின் ஆற்றலில் SLT-MOBITEL
தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. உள்ளடக்கிய கல்வி வாய்ப்புகளை வளர்த்தெடுத்தல், டிஜிட்டல்
இடைவெளியைக் குறைத்தல் மற்றும் அடுத்த தலைமுறைக்காக பிரகாசமான, சிறந்த இணைப்பைக் கொண்ட
எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உதவுதல் ஆகியவற்றில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை
இச்செயற்திட்டங்கள் வெளிப்படுத்துகின்றன.
































