Oct 21, 2026 - 08:44 PM

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராகத் வழக்கை தாக்கல் செய்வதற்கான ஆவணத்தை கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் பொலிஸ் மா அதிபர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகத் தீர்மானித்தே இந்தக் ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான இரண்டு வழக்குகளில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றத் தவறியதன் மூலம் பொலிஸ் மா அதிபர் நீதிமன்றத்தைக், கேலிக்குள்ளாக்கியுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் நீதிமன்றத்தை ஏமாற்ற முற்படுவதாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டு இந்த வழக்கை தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
































