Oct 22, 2026 - 02:18 PM

ஜெயிலர் 2 உலகம் முழுவதும் திரையிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது.
எங்கு திரும்பினாலும் மக்கள் அலை தான் இந்த படத்திற்கு, இந்நிலையை ஜெயிலர் 2 தற்போது வரை ரூ 580 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.
இந்த படத்தில் நீளம் காரணமாக பல காட்சிகளை கட் செய்ததாக கூறப்பட்டது, அதுவும் படத்தின் வேகத்தை தொந்தரவு செய்யாமல் இருக்க அப்படி என கூறிய நிலையில், தற்போது இப்படத்தில் நடித்திருந்த ஜாபர் சாதிக் பேசுகையில், அல்ல பெல்லா பாடலில் ரஜினி சாரும் நடனமாடுவது போல் காட்சிகள் இருந்தது.
அதை பைனல் எடிட்டில் கட் செய்து விட்டார்கள், 200 பெண்களுக்கு நடுவே அவர் கியிட் ஆக நடனமாடினார், அதை என்னால் வெளியிட முடியாது, ஒருவேளை டெலிட் செய்யப்பட்ட காட்சி என படக்குழு வெளியிடலாம் என ஜாபர் கூறியுள்ளார்.
































