Oct 22, 2026 - 01:42 PM

வீட்டு உபயோக உடற்பயிற்சி தீர்வுகளை இலங்கைக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது முதல்,
முன்னணி விளையாட்டு வீரர்கள் மற்றும் கிராமப்புற விளையாட்டு சமூகங்களுக்கு ஆதரவளிப்பது வரை
குவாண்டம் ஃபிட்னஸ் (Quantum Fitness) நிறுவனம், நாட்டின் உடற்பயிற்சித் துறையின் வளர்ச்சியில் ஒரு
வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
1998 ஆம் ஆண்டு குவாண்டம் டெலிஷாப்பிங் என்ற பெயரில் தனது பயணத்தைத் தொடங்கிய குவாண்டம்
ஃபிட்னஸ் நிறுவனம், இலங்கையில் 28 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. நாட்டில்
தொலைபேசி வழியிலான விற்பனையும் (Teleshopping), வீட்டு உபயோக உடற்பயிற்சிப் பழக்கமும் ஆரம்ப
கட்டத்தில் இருந்த ஒரு காலக்கட்டத்திலேயே இந்நிறுவனம் காலடி எடுத்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த முப்பதாண்டு காலப் பகுதியில், வீடுகள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான
சர்வதேச தரம் வாய்ந்த உடற்பயிற்சி உபகரணங்களை விநியோகிக்கும் முன்னணி நிறுவனமாக குவாண்டம்
ஃபிட்னஸ் உருவெடுத்துள்ளது. அத்துடன், நாடு முழுவதும் தனது காட்சியறை வலைப்பின்னலை
விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தயாரிப்புகளையும் சிறந்த விற்பனைக்குப் பிந்தைய
சேவைகளையும் மிக எளிதாகக் கிடைக்கும் வகையில் வழங்கி வருகிறது.
நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 2012 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ICON Health
Fitness நிறுவனத்துடன் இணைந்த குவாண்டம், சர்வதேசப் புகழ்பெற்ற NordicTrack வர்த்தக நாமத்தை
இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது. பிரபல நடிகை அனார்கலி ஆகர்ஷா இதன் வர்த்தகத் தூதராக
நியமிக்கப்பட்டார். 40 பாகை (40°) வரை உயர்த்தக்கூடிய அதிநவீன டிரெட்மில் (Treadmill)
தொழில்நுட்பத்தைக் கொண்ட இவ்வுபகரணங்கள், நாட்டின் உடற்பயிற்சிப் பிரியர்களுக்கு முற்றிலும் புதிய
பயிற்சி அனுபவத்தை வழங்கின.
வணிக ரீதியிலான உடற்பயிற்சிச் சேவைகளுக்கும் அப்பால் குவாண்டம் நிறுவனத்தின் பங்களிப்பு
விரிவடைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், சீனிகமவில் உள்ள Foundation of Goodness நிலையத்தில் பயிற்சி
பெறும் கிராமப்புற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில், ஒன்பது மாத பரிசோதனை
முயற்சிக்கு Power Plate சாதனங்களை நிறுவனம் வழங்கியது. பரிசோதனை முயற்சியின் வெற்றியைத்
தொடர்ந்து, 2021 ஜனவரியில் அச்சாதனங்களை நிரந்தரமாக நன்கொடையாக வழங்கியது. இலங்கை
கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இந்நன்கொடையைப் பொறுப்பேற்றுக்
கொண்டார்.
வணிக ரீதியிலான உடற்பயிற்சிச் சேவைகளுடன் நின்றுவிடாமல், சமூக நலன் சார்ந்த திட்டங்களிலும்
குவாண்டம் ஃபிட்னஸ் தடம் பதித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு, சீனிகமவிலுள்ள பவுண்டேஷன் ஆஃப்
குட்னஸ் (Foundation of Goodness) நிலையத்தில் பயிற்சி பெற்ற கிராமப்புற விளையாட்டு வீரர்களுக்கு
ஆதரவளிக்கும் வகையில், ஒன்பது மாத கால பரிசோதனைப் பயன்பாட்டிற்காக Power Plate
உபகரணங்களை இந்நிறுவனம் வழங்கியது. இப்பரிசோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்ததைத்
தொடர்ந்து, 2021 ஜனவரியில் இவ்வுபகரணங்கள் நிரந்தரமாக நன்கொடையாக வழங்கப்பட்டன. முன்னாள்
இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார இந்நன்கொடையைப் ஏற்றுக்கொண்டார்.
தனது 28 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், குவாண்டம் நிறுவனம் மினி கூடைப்பந்து
போட்டி (Mini Basketball Challenge) எனும் சுவாரஸ்யமான நிகழ்வை காட்சியறைகள் மற்றும்
உத்தியோகபூர்வ இணையதளம் வாயிலாக வாடிக்கையாளர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது. இதில்
பங்கேற்றுத் திறமைகளை வெளிப்படுத்தும் வாடிக்கையாளர்கள், 20% வரையிலான சிறப்புத்
தள்ளுபடிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதன் மூலம் இந்த ஆண்டு நிறைவு விழாவை
வாடிக்கையாளர்களுக்கான ஒரு கொண்டாட்டமாகவும், பயன்பெறும் வாய்ப்பாகவும் இந்நிறுவனம்
மாற்றியுள்ளது.
உடற்பயிற்சி என்பது எவரும் எளிதில் அணுகக்கூடியதாகவும், சுவாரஸ்யமானதாகவும், மகிழ்ச்சி
தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்ற குவாண்டம் வர்த்தக நாமத்தின் நம்பிக்கையை இத்திட்டம்
பிரதிபலிக்கிறது. அத்துடன், உடலியக்கத்தின் புத்துணர்ச்சியை வாடிக்கையாளர்களின் அனுபவத்தோடு
இணைக்கும் ஒரு முயற்சியாகவும் இது அமைந்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் நல்வாழ்வு சார்ந்த திட்டங்கள் மூலமாகவும் குவாண்டம்
தனது நற்பெயரை மேலும் வலுப்படுத்தி வருகிறது. நிறுவனத்தின் வாடிக்கையாளர் இணைப்பு நிகழ்ச்சித்
திட்டம் (Customer Engagement Programme) நுகர்வோர் சரியான உடற்பயிற்சி முடிவுகளை எடுக்க
உதவுகிறது. அதேவேளை, குவாண்டம் ஃபிட்னஸ் ஹெல்த் அகாடமி (Quantum Fitness Health Academy)
வாயிலாக உடற்பயிற்சி, வீட்டுப் பயிற்சிகள், ஊட்டச்சத்து, தூக்கம் மற்றும் தொற்றா நோய் தடுப்பு முறைகள்
குறித்து துறைசார் நிபுணர்கள் நடத்தும் இணையவழிக் கருத்தரங்குகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் குவாண்டம் ஃபிட்னஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான நோமல் விஜேயரத்ன
கருத்து தெரிவிக்கையில், “கடந்த 28 ஆண்டுகளில், இலங்கையர்கள் உடற்பயிற்சியை அணுகும் முறையில்
ஒரு கணிசமான மாற்றத்தைக் கண்டுள்ளோம். எமது பயணம் எப்போதும் வாடிக்கையாளர்களின்
தேவைகளுக்கு ஏற்ப எங்களை தகவமைத்துக் கொள்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்று
மக்களுக்கு வெறும் உபகரணங்கள் மட்டும் போதாது. ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையான அறிவும்,
வழிகாட்டலும், இலகுவான தீர்வுகளுமே அவசியமாகின்றன. எதிர்காலத்தில் உடற்பயிற்சியை
அனைவருக்குமானதாகவும், அன்றாட வாழ்க்கைக்கு ஏற்றதாகவும் மாற்றுவதோடு, இலங்கையின்
உடற்பயிற்சித் துறையின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்களிப்பதே எங்கள் இலக்காகும்.” என்று தெரிவித்தார்.
எதிர்காலத்தை நோக்குகையில், நோய் தடுப்பு நல்வாழ்வு, ஆரோக்கியமான முதுமைப் பருவம், பணியிட
ஆரோக்கியம் மற்றும் அனைத்து வயது மற்றும் உடற்திறன் கொண்ட மக்களுக்கான எளிமையான
உடலியக்கம் ஆகியவற்றின் பக்கம் உடற்பயிற்சித் துறையின் கவனத்தைத் திருப்புவதற்கான வாய்ப்புகளை
குவாண்டம் நிறுவனம் தெளிவாகக் காண்கிறது.
தனது 28 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த வேளையில், குவாண்டம் ஃபிட்னஸ் நிறுவனம்
தனது முன்னோடி அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. உடற்பயிற்சியை முறையான
விழிப்புணர்வு கொண்டதாகவும், அனைத்து இலங்கையர்களும் எளிதில் அணுகக்கூடியதாகவும், அவர்களின்
அன்றாட வாழ்க்கையின் ஒரு நிலையான அங்கமாகவும் மாற்றுவதையே இந்நிறுவனம் தனது
தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டுள்ளது.
































