Oct 22, 2026 - 01:32 PM

பெருந்தோட்ட பகுதியில் 100வது பிறந்த நாளைக் கொண்டாடிய பாட்டி ஒருவரின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பெரியண்ணன் காமாட்சி என்பவரே, தமது குடும்பத்தினருடன் நேற்று (21) 100 வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.
இவர் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மத்திய பகுதியில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு 5 பிள்ளைகளும் 20 பேரப்பிள்ளைகளும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
































