Oct 22, 2026 - 01:31 PM

ஒரு சிறந்த தொலைக்காட்சி என்பது அதன் திரை அளவைத் தாண்டிய பல்வேறு சிறப்பம்சங்களைக்
கொண்டது. மேம்பட்ட திரை தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களின் தொகுப்பை
இலங்கை வாடிக்கையாளருக்கு வழங்கும் வகையில், தனது அதிநவீன Mini LED தொலைக்காட்சி வரிசையை
Samsung ஸ்ரீலங்கா நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது.
வழக்கமான LED தொலைக்காட்சிகளை விட மிகவும் சிறிய LED விளக்குகளைப் பயன்படுத்தி மினி டுநுனு
தொலைக்காட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால், தொலைக்காட்சித் திரை முழுவதும் பரவும் ஒளியை
மிகவும் எளிதாகக் கட்டுப்படுத்துவதற்கு தொலைக்காட்சிக்கு இயலுமை கிடைப்பதுடன், அதன் விளைவாக
மிகவும் துல்லியமான நிற வேறுபாடுகளும் உயர்ந்த தெளிவுத்திறனும் கொண்ட காட்சிகளைப்
பார்வையிடுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
மிகவும் பிரகாசமான மற்றும் மிகவும் இருண்ட பகுதிகளைக் கொண்ட காட்சிகளைப் பார்வையிடும் போது
இந்த மாற்றத்தை மிகவும் தெளிவாக அனுபவிக்க முடியும். Mini LED HDR தொழில்நுட்பமானது படத்தின்
மிகப் பிரகாசமான பகுதிகளின் ஒளியை அவ்வாறே பாதுகாத்துக் கொள்வதுடன், இருண்ட பகுதிகளில்
உள்ள நுணுக்கமான விபரங்களையும் அப்படியே திரையில் வைத்துக் கொள்கிறது. இந்தத்
தொழில்நுட்பமானது ஒரு காட்சியைத் தெளிவாக வழங்குவதற்காக மாத்திரம் வடிவமைக்கப்படவில்லை,
மாறாக அதன் மூலம் திரையில் ஒளி பரவும் விதம் குறித்து தொலைக்காட்சிக்கு மிகவும் உயர்ந்த மற்றும்
துல்லியமான கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
உயர்ந்த Phosphor தொழில்நுட்பத்தைக் கொண்ட Pure Spectrum Color தொழில்நுட்பம் மூலம், இயற்கையான
தோற்றமளிக்கும் படங்களுக்கு மிகவும் துல்லியமான நிறங்களை வழங்கி, பரந்த நிற வரம்பை உருவாக்குவது
Mini LED தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும். அதில் வரும் Color Booster சிறப்பம்சம் மூலம் காட்சிகள்
மேலும் மேம்படுத்தப்படுவதுடன், காட்சியின் அனைத்து விபரங்களையும் அப்படியே பேணி நிறங்களை
மிகவும் எடுப்பாக வெளிப்படுத்தவும் இது உதவுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த Samsung Electronics நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகள்
நாடுகளுக்கான நுகர்வோர் இலத்திரனியல் பிரிவின் பணிப்பாளரும் பிரதானியுமான சப்ரி அன்சார்,
“அன்றாட பொழுதுபோக்கினுள் தொழில்நுட்பம் மூலம் ஏற்படுத்தக்கூடிய சிறப்பான மாற்றத்தை எமது
வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது புதிய Mini LED
தொலைக்காட்சி தயாரிப்பு வரிசை ஊடாக, மிகவும் உயர்ந்த படத் தரம், AI சிறப்பம்சங்கள் மற்றும் மிகவும்
தெளிவான காட்சிகளைப் பார்வையிடும் திறனை வழங்க எமக்கு இயலுமாகியுள்ளது. இதன் மூலம்
வாடிக்கையாளரை கவர்ந்து மிகவும் எளிதாக ரசித்து அனுபவிக்கக்கூடிய நிகரற்ற ஒரு அனுபவத்தை வழங்க
முடிவதுடன், இந்த புதிய கண்டுபிடிப்புகளை இலங்கை வாடிக்கையாளரிடம் கொண்டு வருவதற்கு
முடிந்துள்ளமை குறித்து நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம்,” எனத் தெரிவித்தார்.
இங்கு பெரும்பாலான செயற்பாடுகள் தானியங்கு முறையில் இடம்பெறுவதால் பார்வையாளர்கள் எத்தகைய
அமைப்புகளையும் (Settings) மாற்ற வேண்டிய அவசியமில்லை. Samsung இன் NQ4 AI Gen2 செயலி
(Processor) மூலம் திரையில் ஓடும் காட்சிகள் நேரலையாகப் பகுப்பாய்வு செய்யப்படுவதுடன், படங்களின்
நிற வேறுபாடுகள், நிறக் கலவைகள் மற்றும் தெளிவுத்திறன் ஆகியவை தானாகவே சீரமைக்கப்படுகின்றன.
இதில் உள்ள Vision AI Companion சிறப்பம்சம் மூலம் தொலைக்காட்சி உடன் செயற்படும் புதிய
அனுபவமானது வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தமக்கு விரும்பிய
கேள்விகளைக் கேட்பதற்கும், தகவல்களைத் தேடுவதற்கும் அல்லது திரையில் பார்த்துக் கொண்டிருக்கும்
விடயம் தொடர்பான மேலதிக விபரங்களை நேரடியாகத் திரை ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு
ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், தொலைக்காட்சியானது வெறும் காட்சிகளை மாத்திரம்
காட்டும் கருவியாகவன்றி, பார்வையாளரின் தேவைகளுக்கு நேரலையாகப் பதிலளிக்கக்கூடிய
நுண்ணறிவுள்ள சாதனமாக இயல்பாகவே மாற்றம் பெறும்.
கால்பந்து ரசிகர்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள Soccer Mode சிறப்பம்சமானது, விளையாட்டு
மைதானத்தில் உள்ள முக்கிய தகவல்கள், நிறங்கள் மற்றும் தெளிவுத்திறனை மேம்படுத்துவதன் மூலம்
போட்டிகளை மிகவும் கவர்ச்சிகரமாகப் பார்வையிட உதவுகிறது. குறிப்பாக போட்டியின் பந்தும் வீரர்களும்
மிகவும் வேகமாக மைதானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு நகரும் தீர்க்கமான தருணங்களில்கூட
காட்சிகளை மிகவும் தெளிவாகப் பார்வையிடுவதற்கு இதனால் பார்வையாளருக்கு இலகுவான சூழல்
அமைகிறது.
படங்களுக்கு மாத்திரமன்றி ஒலி வடிவங்களுக்கும் இந்த சிறப்பான தொழில்நுட்பம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், AI Sound Controller மூலம் திரைக்கு ஏற்ப ஒலி தானியங்கு முறையில்
மாறுவது நிகழ்கிறது. Soundtrack இல் உள்ள பல்வேறு பகுதிகளைச் சரியான முறையில் சமநிலைப்படுத்த
முடிவதால், ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது அதன் உரையாடல்களை மிகவும் தெளிவாகக்
கொண்டுவரவும், நேரலை விளையாட்டுப் போட்டியொன்றின் போது பின்னணி இரைச்சலைக்
கட்டுப்படுத்தி வர்ணனையாளர்களின் விபரணங்களையும் மைதானத்தின் உண்மையான சூழலையும்
மிகவும் தெளிவாக அனுபவிக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
வாடிக்கையாளர் ஒருவர் தொலைக்காட்சி ஒன்றின் ஊடாக எதிர்பார்ப்பது இன்று முற்றிலுமாக
மாறியுள்ளதை இதன் மூலம் நன்றாகப் புரிந்து கொள்ள முடிவதுடன், திரையின் அளவைவிட அதற்குப்
பின்னால் உள்ள தரவு செயலாக்க வலிமை, ஒலியின் தரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவை
மிகவும் முக்கியம் என்பதையும் இது வலியுறுத்துகிறது.
Mini LED தொழில்நுட்பம், AI காட்சி செயலாக்கம், உரையாடல் அம்சங்கள் மற்றும் விளையாட்டுப்
போட்டிகளுக்கான மென்மையான பார்வை அனுபவம் ஆகியவற்றின் சேர்க்கையுடன், Samsung இன் புதிய
Mini LED தொடரானது திரையில் எதைப் பார்த்தாலும் சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
































