Oct 28, 2026 - 11:55 PM

இந்நாட்டின் கனியவளத் துறைக்கு பலமான முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பது குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, கனியவளத் துறைக்கு தேவையான காணிகளை இனங்காணல் மற்றும் கனிய வளங்களைக் கண்டறிதல் ஆகியவற்றின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும், கஹட்டகஹ மற்றும் எப்பாவல ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் கனிய வளங்கள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பில் வெளியிடப்படும் அறிக்கைகளை சர்வதேச தரங்களுக்கு இணங்க தயாரித்து, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அறிக்கைகளாக மாற்றுவதற்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், எதிர்காலத்தில் கனிய வளங்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வெளிப்புற நிபுணர்களிடம் கையளிப்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இரத்தினக்கல் தொழில்சார் அகழ்வுப் பணிகளை சட்டப்பூர்வமாகவும் முறையாகவும் முன்னெடுப்பதற்காக பலமான கொள்கைத் தொகுப்பொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இரத்தினக்கல் ஏற்றுமதியின் போது இடம்பெறும் மோசடிகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றமும் இதன்போது ஆராயப்பட்டது.
மேலும், உள்நாட்டு இரத்தினக்கல் தொழிற்துறையை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது ஆகிய நோக்கங்களுடன் அமைக்கப்பட்டு வரும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மையத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
































