Oct 29, 2026 - 07:20 AM

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலமானது தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் மற்றும் பிற மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அபாயம் காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த கண்காணிப்பகம், போதிய நீதிமன்ற மேற்பார்வையின்றியோ அல்லது குற்றச்செயலொன்றைப் புரிந்ததற்கான ஆதாரங்களின்றியோ நபர்களை நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைப்பதற்கு இச்சட்டமூலம் வழியமைக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
பொலிஸாரால் பெறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டனை வழங்குவதற்கு அனுமதியளிப்பதன் மூலம் சித்திரவதைகளை ஊக்குவிப்பதற்கு ஏதுவாக அமையக்கூடும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் எலென் பியர்சன் (Elaine Pearson) தெரிவித்துள்ளார்.
இச்சட்டம் தற்போதுள்ள வடிவில் நிறைவேற்றப்பட்டால், இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த கடுமையான சட்டங்களால் ஏற்பட்டது போன்றே கடுமையான மனித உரிமை மீறல்களின் அலை உருவாகும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
































