Oct 29, 2026 - 07:50 AM

பொலிஸ் காவலில் இருந்தபோது சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்று (28) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹொரணை, பெல்லபிட்டிய பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகளின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
































