Oct 29, 2026 - 03:02 PM

JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை நிறுவனமான ஜனசக்தி லைஃப், Great Place To Work® Sri Lanka நிறுவனத்தினால் 2026ஆம் ஆண்டுக்கான இளம் திறமையாளர்களுக்கான இலங்கையின் சிறந்த 20 பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இளம் தொழில் வல்லுநர்கள் கற்றுக்கொள்ளவும், தமது பங்களிப்பை வழங்கவும், அர்த்தமுள்ள தொழில் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளவும் ஏற்ற பணிச்சூழலை ஏற்படுத்துவதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது.
உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட Great Place To Work® For All™ மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், Trust Index™ Employee Experience Survey மற்றும் Culture Audit™ ஆகியவற்றின் ஊடாக நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. Trust Index™ மதிப்பீடு, பணியாளர்களின் நம்பிக்கை, பெருமித உணர்வு மற்றும் சக பணியாளர்களுடனான நல்லுறவு போன்ற அம்சங்களில் அவர்களது அனுபவங்களை மதிப்பிடும் அதே வேளை, Culture Audit™ மதிப்பீடு, நேர்மறையான பணியாளர் அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுவனங்கள் முன்னெடுக்கும் மனிதவள நடைமுறைகளை மதிப்பிடுகின்றது.
ஜனசக்தி லைஃப்பில், நிறுவனத்தின் மனிதவள மூலோபாயம், வெவ்வேறு பணியாளர் பிரிவினரிடையே காணப்படும் தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளை புரிந்துகொள்வதை அடிப்படையாகக் கொண்டது. இதில், இளம் திறமையாளர்களின் வளர்ச்சிக்கு முக்கிய முன்னுரிமை வழங்கப்படுகின்றது. விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பணிச்சூழலில் கவனம் செலுத்தும் நிறுவனம், இளம் தொழில் வல்லுநர்களை தமது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும், பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் ஊக்குவிக்கின்றது.
வழிகாட்டல், பயிற்சி அளித்தல், தொடர்ச்சியான கற்றல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஊடாக இளம் பணியாளர்கள் தமது திறன்களை மேம்படுத்தி, தமது ஆற்றல்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு ஜனசக்தி லைஃப் ஆதரவளிக்கின்றது. மேலும், பல்வேறு கருத்துகளுக்கு மதிப்பளிக்கும், பணியாளர்களின் நலனில் அக்கறை செலுத்தும் மற்றும் அனைவரும் தாம் சார்ந்திருக்கும் உணர்வைப் பெற ஊக்கமளிக்கும் திறந்த மற்றும் ஒத்துழைப்புடனான பணிக்கலாசாரமும் பேணப்படுகின்றது. பணியாளர்களிடையேயான உறவுகளையும் தோழமையையும் வலுப்படுத்தி, மகிழ்ச்சிகரமான மற்றும் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் பணிச்சூழலை உருவாக்குவதற்கும் நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கின்றது.
இந்த அங்கீகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனசக்தி லைஃப்பின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியான ரவி லியனகே, “இளம் தொழில் வல்லுநர்கள் புதிய கண்ணோட்டங்களையும் புதுமையான எண்ணக்கருத்துக்களையும் கொண்டு வருவதுடன், எமது வணிகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளனர். அவர்கள் தமது திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும், நிறுவனத்தின் மூலோபாய முன்னுரிமைகளை முன்னெடுப்பதில் பொறுப்புடன் பங்களிப்பதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குவது எமது உள்ளக நிறுவனக் கலாசாரத்தின் முக்கிய அம்சமாகும். இளம் திறமையாளர்கள் தமது தொழில் வாழ்க்கையில் முன்னேறுவதுடன், நிறுவனத்திற்கும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கக்கூடிய பணியிடத்தை உருவாக்குவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது.” என்றார்.
ஜனசக்தி லைஃப்பின் மனிதவளத் தலைவர் தனுஷ்க செனத் D சமரசிங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “இளம் தொழில் வல்லுநர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து மாறிவருகின்றன. தொழில் முன்னேற்றத்திற்கு அப்பால், அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்குவதற்கான வாய்ப்புகளையும், நிறுவனத்தின் விழுமியங்களையும் பணிக்கலாசாரத்தையும் அவர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அதேவேளை, தமது திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வழிகாட்டலுக்கும் அனுபவப் பகிர்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இந்த மாற்றமடைந்து வரும் எதிர்பார்ப்புகளை எமது மனிதவள மூலோபாயம், கருத்தில் கொள்கின்றது. இளம் திறமையாளர்கள் மதிக்கப்படுவதாகவும், தமது திறன்களை வெளிப்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுவதாகவும், வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதாகவும் உணரும் பணிச்சூழலை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்துகின்றோம்.” என்றார்.
2026ஆம் ஆண்டில் ஜனசக்தி லைஃப் பெற்றுள்ள ஏனைய பணியிட அங்கீகாரங்களுடன் இந்த அங்கீகாரமும் இணைந்துள்ளது. Great Place To Work® Sri Lanka நிறுவனத்தினால் இலங்கையின் 50 சிறந்த பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டமை மற்றும் Satynmag Women-Friendly Workplace Awards நிகழ்வில் பெண்களுக்கு உகந்த 20 சிறந்த பணியிடங்களில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டமை ஆகியன அவற்றில் அடங்குகின்றன. இவை அனைத்தும், பணியாளர்களின் திறன் மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய பணியிட நடைமுறைகள் மற்றும் தொழில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பணியாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் ஜனசக்தி லைஃப் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை எடுத்துக்காட்டுகின்றன.
ஜனசக்தி லைஃப் பற்றி
JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை ஆயுள் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி லைஃப், 1994 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு வலுவூட்டி வருகிறது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவினால் (IRCSL) உரிமம் பெற்றுள்ள இது, நாடு முழுவதிலும் பரந்த 76 கிளைகளுடன் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளது. மேலும், “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது.
































