Oct 29, 2026 - 04:08 PM

அமானா வங்கியின் 50 ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் கொழும்பு, கிராண்ட்பாஸ்
பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வங்கி தனது 15 வருட பூர்த்தியைக் கொண்டாடும்
இச்சந்தர்ப்பத்தில், இந்த 50ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை
முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த திறந்து வைப்புடன், அமானா
வங்கியின் நாடளாவிய ரீதியிலான பிரசன்னம் தற்போது 83 வாடிக்கையாளர் சேவை
மையங்களாக அதிகரித்துள்ளது. இதில் 33 முழு அளவில் இயங்கும் கிளைகள் அடங்கியுள்ளன.
புதிய சுய வங்கிச் சேவை நிலையத்தை அமானா வங்கியின் முகாமைத்துவப்
பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், சிரேஷ்ட உப தலைவர் -
பிரதம இணக்கப்பாட்டு அதிகாரி அஜ்மல் நலீர், சிரேஷ்ட உப தலைவர் – வணிக வங்கியியல்
இர்ஷாத் இக்பால், உப தலைவர் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் சித்தீக்
அக்பர் மற்றும் வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து திறந்து வைத்தனர்.
ஜனரஞ்சகமான கிராண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய சுய வங்கிச் சேவை
நிலையம், வளர்ந்து வரும் வியாபாரங்கள் மற்றும் வதிவிட சமூகங்களின் பரந்தளவு வங்கித்
தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. பல வர்த்தக நிலையங்கள்,
தொழில்முயற்சியாளர்கள், வியாபாரங்கள் மற்றும் குடியிருப்புகள் போன்றவற்றின்
இருப்பிடமாக அமைந்துள்ள கிராண்ட்பாஸ் பகுதியில் அமானா வங்கியின் பிரசன்னம்
என்பது, வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு சௌகரியத்தை வழங்கும் என்பதுடன், பண
மீளப் பெறல்கள், பண வைப்புகள், காசோலை வைப்புகள் மற்றும் கட்டணப் பட்டியல்
கொடுப்பனவுகள் போன்ற அத்தியாவசிய வங்கிச் சேவைகளை 24x7 நேரமும் அணுகும்
வசதியை வழங்கும்.
அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்அமானா வங்கியின் முகாமைத்துவப்
பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் இந்த சேவை நிலையத்தின்
திறந்து வைப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “எமது 50 ஆவது சுய வங்கிச் சேவை
நிலையத்தை, எமது 15 வருட பூர்த்தியில் திறந்து வைத்துள்ளமை, வங்கியைப்
பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. கடந்த
ஐந்தாண்டுகளில், எமது சுய வங்கிச் சேவை நிலைய மாதிரியில் நாம் பெருமளவு முதலீடுகளை
மேற்கொண்டுள்ளோம், அதனூடாக பல சமூகங்களுக்கு அத்தியாவசிய வங்கிச் சேவைகளை
அருகாமையில் கொண்டு செல்வதற்கு எம்மால் முடிந்துள்ளதுடன், அதிகரித்துச் செல்லும்
சௌகரியமான, சுய-சேவை வங்கியியல் தெரிவு போன்றவற்றை நிவர்த்தி செய்யவும்
முடிந்துள்ளது. எமது சுய வங்கிச் சேவை நிலையக் கோட்பாட்டின் வெற்றிகரமான செயற்பாடு
என்பது, எமது அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட, மக்களுக்கு நட்பான வங்கியியல்
மாதிரியை வாடிக்கையாளர்களுக்கும், சமூகங்களுக்கும் அணுகச் செய்வதில் மிகவும்
முக்கியமான அங்கமாக அமைந்துள்ளது. கிராண்ட்பாஸ் என்பது வியாபாரங்கள்,
தொழில்முயற்சியாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் நிறைந்த உறுதியான சமூகமாகும். எமது
50ஆவது சுய வங்கிச் சேவை நிலையத்தை கிராண்ட்பாஸ் பகுதியில் நிறுவியுள்ளதையிட்டு
நாம் மிகவும் பெருமை கொள்கிறோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும்
நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும்
அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப்
பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள
பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில்
அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது.
வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான
50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால்
தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள்
எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக
அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது
ஈடுபாட்டை பேணி வருகின்றது.
































