Oct 29, 2026 - 04:11 PM

SLT-MOBITEL இலங்கை முழுவதும் முன்னெடுத்து வரும் SmartChat வாடிக்கையாளர் ஈடுபாட்டு செயற்பாட்டின் தொடர்ச்சியாக, SmartChat – தென் மாகாணம் நிகழ்வை வெலிகம பே மெரியட் ரிசோர்ட் அன்ட் ஸ்பாவில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்நிகழ்வில் தென் மாகாணத்தைச் சேர்ந்த 70 க்கும் மேற்பட்ட முன்னணி வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
தென் மாகாணத்தின் முக்கிய பங்குதாரர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடவும், அவர்களின் வளர்ந்து வரும் இணைப்புத்தன்மை மற்றும் டிஜிட்டல் தேவைகளைப் புரிந்துகொள்ளவும், புத்தாக்கமான தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தீர்வுகள் மூலம் அவர்களின் வியாபாரங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகளை ஆராயவும் SLT-MOBITEL நிறுவனத்திற்கு இந்நிகழ்வு ஒரு பயனுள்ள தளமாக அமைந்தது.
பயனுள்ள நேரடித் தொடர்பாடல்கள் மூலம் தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பிராந்திய பங்குதாரர்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு SLT-MOBITEL தொடர்ந்து வழங்கி வரும் உறுதியான அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக SmartChat அமைந்துள்ளது. SLT-MOBITEL இன் பரந்த அளவிலான இணைப்புத்தன்மை, என்டர்பிரைஸ் தீர்வுகள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை இந்தத் திட்டம் வெளிப்படுத்துவதுடன், பல்வேறு பிராந்தியங்களின் தனித்துவமான தேவைகள் குறித்த ஆழமான நுண்ணறிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சிறந்த வாய்ப்பை வழங்குகின்றது.
தென் மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் போது, பங்கேற்பாளர்கள் SLT-MOBITEL குழுவினருடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கும், வணிக வளர்ச்சி, டிஜிட்டல் உருமாற்றம் மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்புத்தன்மை ஆகியவற்றிற்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் அதிநவீன தீர்வுகள் மற்றும் சேவைகள் குறித்த ஆழமான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
மேலும், ஒரு திறந்த கருத்துப் பரிமாற்றத்திற்கு இந்நிகழ்வு வழிகோலியதுடன், பங்கேற்ற நிறுவனங்கள் தங்களின் தேவைகள், சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை SLT-MOBITEL உடன் பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பளித்தது. இத்தகைய பரஸ்பர உரையாடல்கள், இருதரப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதுடன், அப்பிராந்தியத்தின் வணிகங்கள் மற்றும் நிறுவனங்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப அமைந்த தீர்வுகளை வழங்குவதற்கு நிறுவனத்திற்கு முழுமையாக வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
70 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பங்கேற்பு, SLT-MOBITEL தனது பாரம்பரிய வாடிக்கையாளர் தொடர்பாடல்களுக்கு அப்பால் பங்குதாரர்களுடன் தொடர்ந்து கட்டியெழுப்பி வரும் வலுவான உறவுகளைப் பிரதிபலிக்கின்றது. SmartChat போன்ற முயற்சிகள் மூலம், நிறுவனம் இலங்கை முழுவதிலுமுள்ள நிறுவனங்களுக்கு ஒரு நம்பகமான தொழில்நுட்ப மற்றும் இணைப்புத்தன்மை பங்காளியாகத் திகழ்வதில் தொடர்ந்தும் உறுதியுடன் கவனம் செலுத்தி வருகின்றது.
ஏனைய பிராந்தியங்களில் நடத்தப்பட்ட SmartChat நிகழ்வுகளின் வெற்றியைத் தொடர்ந்து, இப்போதைய SmartChat – தென் மாகாணம் திட்டம், பிராந்திய ரீதியிலான வலுவான இருப்பைப் பேணுவதற்கும், தனது நிபுணத்துவம், தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நாடு முழுவதிலுமுள்ள வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதற்குமான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தியிருந்தது.
































