Oct 29, 2026 - 08:33 PM

மறைந்த பிரபலங்கள் மற்றும் நண்பர்களின் உடல்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதில்லை என்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், இசையமைப்பாளர் இளையராஜா விளக்கமளித்து வீடியோ ஒன்ற வெளியிட்டுள்ளார்.
தன்னிடம் கிட்டார் வாத்திய கலைஞராக நீண்ட காலம் பணியாற்றிய சதானந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா வெளியிட்டுள்ள காணொளியிலேயே இந்த விபரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவிக்கையில், "காலமானவர்களை அந்த நிலையில் பார்க்க நான் விரும்புவதில்லை. அவர்கள் என்னுடன் உயிருடன் வாழ்ந்தவர்கள், என் உணர்வுகளோடு கலந்தவர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இறந்தவர்களின் நினைவுகளை அவர்கள் உயிருடன் இருந்தவாறே தன் மனதில் வைத்திருக்க விரும்புவதாலேயே, அவர்களின் இறுதிச்சடங்குகளில் நேரில் பங்கேற்பதைத் தவிர்ப்பதாக அவர் இதன்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
































