Oct 29, 2026 - 09:17 PM

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் இளம் வீரர் பவன் ரத்நாயக்க அதிரடியாக விளையாடி தனது சதத்தைப் பதிவுசெய்துள்ளார்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 387 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலளித்தாடி வரும் இலங்கை அணிக்கு, மத்திய வரிசையில் களமிறங்கிய பவன் ரத்நாயக்க திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 70 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாகத் தனது சதத்தை எட்டினார்.
































