Oct 30, 2026 - 11:47 AM

ஏற்கனவே கூலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ராஜா கருப்பசாமி இயக்கிய மொத ராத்திரி திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களிடமும் பிரபலமானவர் ரிஷிகாந்த்.
இந்த படத்திலேயே இவர் பேசப்பட்ட நிலையில் அடுத்த கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான டோரதி படம் ரிஷிகாந்துக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தை பலரும் கொண்டாடினார்கள். குறிப்பாக திருநங்கைகள் இந்த படத்தை மிகவும் பாராட்டி பேசியிருந்தனர்.
அவர்களின் ஆசீர்வாதம் ரிஷிகாந்துக்கும், சனந்துக்கும் கிடைத்தது.
டோரதி திரைப்படத்தை பார்த்த மிஷ்கின், லிங்குசாமி உள்ளிட்ட பல இயக்குனர்களும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் அகியோரின் நடிப்பை பாராட்டியிருந்தனர்.
எனவே பலருக்கும் ரிஷிகாந்தை வைத்து படமெடுக்கும் எண்ணம் வந்திருக்கிறது. ஆனால் அவரை தொடர்புகொள்ள அவருக்கு போன் செய்தால் யாருடைய ஃபோனையும் ரிஷிகாந்த் எடுப்பதே இல்லை என்கிற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் அடிபடுகிறது. வளரும் போது பணிவாக இருக்க வேண்டும்.. ஆனால் இப்படி போனை எடுக்கவில்லை என்றால் அவருக்கு வாய்ப்புகள் எப்படி அமையும் என்று திரையுலகில் பேச தொடங்கி விட்டனர்.
































