Nov 2, 2026 - 12:02 PM

ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ படம் ஓடிடியில் ‘அன்கட் வெர்ஷன்’ ஆக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த அக்டோபர் 15 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர் 2’. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சரமூடு, ஹிருத்திக் ரோஷன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. படம் உலகம் முழுவதும் 775 கோடி ரூபாவுக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் படம் ரூ.200 கோடியை கடந்துவிட்டதாம். தமிழ் சினிமாவில் அதிகபட்ச வசூல் ஈட்டிய படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவு வீடியோவில் நடிகர் சந்தானம் இடம்பெற்றிருந்தார். ஆனால், படத்திலிருந்து அவரது காட்சிகள் நீக்கப்பட்டது. அதேபோல, மோகன்லால் நடித்த பெரும்பாலான காட்சிகள் நீக்கப்பட்டது கேரள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக பலரும் கருத்து தெரிவித்தனர். விஜய் சேதுபதி நடித்த காட்சிகளும் நறுக்கப்பட்டவிட்டுதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமேசான் ப்ரைம் மற்றும் சன்நெக்ஸ்ட் ஓடிடியில் ‘ஜெயிலர் 2’ வெளியாகும்போது சந்தானம், மோகன்லால், விஜய் சேதுபதி, ஹ்ரித்திக் ரோஷனுக்கான காட்சிகளுடன் திரையரங்குகளில் பார்த்ததை விட 30 நிமிடங்கள் அதிகமான காட்சிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இந்தப் படம் நவம்பர் 10 ஆம் திகதிக்கு மேல் ஓடிடியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
































