Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

தீப ஒளியில் மிளிரும் இலங்கை!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

ஹட்டனில் களைகட்டிய மக்கள் கூட்டம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

போக்குவரத்து இரு மணி நேரம் முடக்கம்!

பஸ் இருக்கிறது பயப்பட வேண்டாம்!

பஸ் இருக்கிறது பயப்பட வேண்டாம்!

அறிவார்ந்த உழைப்புச் சுரண்டலை உடனடியாக நிறுத்து!

அறிவார்ந்த உழைப்புச் சுரண்டலை உடனடியாக நிறுத்து!

தமிழனாக இருக்கவே வெட்கப்படுகிறேன்

தமிழனாக இருக்கவே வெட்கப்படுகிறேன்

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய நேரடி பஸ் சேவை!

ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய நேரடி பஸ் சேவை!

சிறப்புத் தீபாவளிப் பூஜை!

சிறப்புத் தீபாவளிப் பூஜை!

வடபகுதி மீனவர்களையும் வாழ விடுங்கள்!

வடபகுதி மீனவர்களையும் வாழ விடுங்கள்!

மீனவர்களையும் வாழ விடுங்கள்!

மீனவர்களையும் வாழ விடுங்கள்!

வார்த்தைகளால் முட்டிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்!

வார்த்தைகளால் முட்டிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்!

நீங்கள் இனவாதத்திற்குத் துணை போகிறீர்கள்!

நீங்கள் இனவாதத்திற்குத் துணை போகிறீர்கள்!

எதிர்காலத்தில் காணிகள் வழங்கப்படும்!

எதிர்காலத்தில் காணிகள் வழங்கப்படும்!

அஸ்வெசுமவில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்!

அஸ்வெசுமவில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்!

பண்ணையாளர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்!

பண்ணையாளர்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்!

    Mobitel Inner 1278

    தமிழ்த் திரையுலகின் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகள் கொண்ட யுவன் சங்கர் ராஜாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான இவர், தமிழ் சினிமாவில் மேற்கத்திய இசை வடிவங்களை பரவலாக்கிய பெருமைக்குரியவர்.

    குறிப்பாக, தமிழ் இசைத்துறையில் Hip-hop, EDM மற்றும் Jazz போன்ற இசை வகைகளை அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் நெஞ்சங்களில் இசை இளவரசனாக இடம்பிடித்தவர்ர்.


    1997 ஆம் ஆண்டு அரவிந்தன் படத்தின் மூலம் அறிமுகமான யுவன், இதுவரை 190 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான்கள் வரிசையில் இளையராஜா, ஏஆர் ரஹ்மானுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவுக்கும் ஒரு இடம் இருக்கிறது. இளையராஜாவை போல யுவன் சங்கர் ராஜாவின் இசைக்காகவே ஓடிய திரைப்படங்களும் இருக்கின்றன. அந்தளவு இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த பல இசை ஆல்பங்களை யுவன் கொடுத்துள்ளார்.


    இந்த சூழலில் தான் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் யுவன் சங்கர் ராஜா, திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாடியது ரசிகர்களை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.


    திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தி திருமண விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், கனிமொழி, வைரமுத்து உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாட்டு பாடிய வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


    திருமண மேடையில் யுவன் பாடியதை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள், யுவன் நீங்க என்ன பண்றீங்க இங்க என்றும், ஒரு காலத்தில் எப்படி இருந்தவர், இப்போது இந்த நிலைமைக்கு வந்துவிட்டார் என்றும், ரசிகர்களை வேதனை படுத்தாமல் இருங்கள் என்றும் எமோசனை வெளிப்படுத்தி வருகின்றனர்.


    அதேநேரத்தில் இப்படி திருமண நிகழ்ச்சிகளில் இசையமைப்பது சாதாரணம் தான் என்றும், ஏஆர் ரஹ்மான் அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் இசையமைத்திருக்கிறார் என்றும், இது பணத்திற்காக இருக்காது என்றும் சில ரசிகர்கள் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.