Nov 2, 2026 - 04:20 PM

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய நிலையில், மெதுவாகப் பந்துவீசியதற்காக அந்த அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி கடந்த 31 ஆம் திகதி லாகூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 325 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து 326 ஓட்டங்களை என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, 48.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முத்தரப்பு ஒருநாள் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
இந்நிலையில், இறுதிப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பாகிஸ்தான் அணி ஒரு ஓவர் குறைவாக வீசியது தெரியவந்ததையடுத்து, அந்த அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து தலா 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
































