Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
நிகழ்நிலை காப்புச் சட்டம்

நிகழ்நிலை காப்புச் சட்டம்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன் போராட்டம்!

பண்ணையாளர்களுக்கு பாதிப்பின்றி தீர்வு காண்போம்!

பண்ணையாளர்களுக்கு பாதிப்பின்றி தீர்வு காண்போம்!

 வட்டவளையில் விசேட திடீர் சோதனை

வட்டவளையில் விசேட திடீர் சோதனை

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

மட்டக்களப்பில் முடங்கியது மீனவர் வாழ்க்கை!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

வௌியான சிசிடிவி காட்சிகள்!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

பக்கவாதம் வராமல் தடுக்கச் சில வழிகள் உள்ளன!

வௌியான சிசிடிவி காட்சிகள்...

வௌியான சிசிடிவி காட்சிகள்...

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

முன்பை போல நாடகம் காண்பிக்க முயற்சி?

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்திகளில்...

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வட்டவளை ரயில் நிலையம்!

மலையகத்தில் வெளுத்து  வாங்கிய மழை!

மலையகத்தில் வெளுத்து வாங்கிய மழை!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

செம்மணி விசாரணையில் அரசு தலையீடு செய்யாது!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

ஹட்டனில் பேருந்துகள் மீது மண்மேடு சரிவு!

டயகம ஈஸ்ட்டில்  கொதித்தெழுந்த மக்கள்!

டயகம ஈஸ்ட்டில் கொதித்தெழுந்த மக்கள்!

    Mobitel Inner 1278

    'டேர் டெவில்' படத்தின் பூஜை சென்னையில் இன்று (02) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஷாலினி அஜித் குமார் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


    சென்னை, நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள 64 ஆவது திரைப்படம் 'டேர் டெவில்'. இந்தப் படத்தை 'குட் பேட் அக்லி' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.


    அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார், தனது 'பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ்' நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


    பூஜையில் பங்கேற்ற ஷாலினி இந்நிலையில், 'டேர் டெவில்' படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் ஷாலினி அஜித் குமார் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


    படத்தின் தொடக்க விழா தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.தற்போது அஜித்குமார் துபாயில் இருப்பதால், படத்தின் பூஜை நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.


    அவர் நவம்பர் 06 ஆம் திகதி சென்னை திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், படப்பிடிப்பு தொடங்கும் நாளில் அஜித் படக்குழுவினருடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    நட்சத்திர பட்டாளத்துடன் 'டேர் டெவில்' இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், உன்னி முகுந்தன், சுனில், பிரபு, ரெடின் கிங்ஸ்லி, ஆர். பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    'குட் பேட் அக்லி' படத்திற்குப் பிறகு அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் இணைவதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, அதிரடி காட்சிகளும் வித்தியாசமான கதைக்களமும் இடம்பெறுமா என்ற ஆவல் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.


    'டேர் டெவில்' படத்தின் முழுமையான படப்பிடிப்பு நவம்பர் 12 ஆம் திகதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிகிறது.