Nov 2, 2026 - 08:02 PM

விவசாய நடவடிக்கைகளுக்காகக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு, ஆனால் பயிர்ச்செய்கை செய்யப்படாமல் உள்ள நிலங்களை மீண்டும் அரசுக்குச் சுவீகரித்து, பயனுள்ள விவசாயத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கே.டி. லால் காந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அரசின் விவசாய நிலங்கள் பல்வேறு பயிர்ச்செய்கைத் திட்டங்கள் மற்றும் முதலீடுகளுக்காகத் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த போதிலும், சில நிலங்கள் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாமல் செயலற்ற நிலையில் உள்ளமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, அத்தகைய நிலங்களை அடையாளம் கண்டு, குத்தக ஒப்பந்தங்களின் நிபந்தனைகள் மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக மீண்டும் சுவீகரித்து, பயிரச்செய்கை செய்யும் திறன் கொண்ட தரப்பினரின் பயனுள்ள திட்டங்களுக்கு ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது பயிரச்செய்கை செய்யப்படாத குத்தகை நிலங்களைக் கொண்ட 135 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து நிலங்களை மீண்டும் பெற்று, பயனுள்ள விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் கிராமப்புற மக்களுக்கு வருமான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
































