Nov 2, 2026 - 06:43 PM

காலி, உனவட்டுன சுற்றுலா வலயத்தின் வீதியொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டுச் சிறுவர்கள் குழுவொன்றைத் தாக்குவதாகக் கூறி, குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்த நபரொருவர் உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பணியக அதிகாரிகளால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 12 மற்றும் 13 வயதுடைய வெளிநாட்டுச் சிறுவர்கள் சிலர் வீதியில் நின்றிருந்த போது, தனது வணிக நிலையத்திற்கு அதனால் இடையூறு ஏற்படுவதாகக் குற்றஞ்சாட்டி, சந்தேக நபர் இவ்வாறு சிறுவர்களைத் தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தவுடன் உடனடியாகச் செயற்பட்ட உனவட்டுன சுற்றுலா பொலிஸ் சோதனைச் சாவடி அதிகாரிகள் குழுவொன்று, குறித்த சந்தேக நபரை அந்த இடத்திலேயே கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக ஹபராதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக காலி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
































