Nov 4, 2026 - 12:01 PM

தனது பயனர்களுக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், TikTok நிறுவனம் தனது 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான (ஏப்ரல் முதல் ஜூன் வரை) சமூக வழிகாட்டல் அமலாக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. தனது தளத்தின் விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளை விரிவாகக் விளக்கும் இந்த அறிக்கை, உலகளாவிய பயனர் சமூகத்திற்குப் நேர்மறையான அனுபவத்தை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இக்காலப்பகுதியில், இலங்கையில் சமூக வழிகாட்டல்களை மீறியமைக்காக மொத்தம் 4,30,357 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. இது இலங்கையிலிருந்து பதிவேற்றப்பட்ட மொத்த உள்ளடக்கங்களில் சுமார் 0.5% ஆகும். இதில் சிறப்பு அம்சம் என்னவெனில், அகற்றப்பட்ட வீடியோக்களில் 99.4% வீடியோக்கள் பயனர்கள் புகாரளிப்பதற்கு முன்னரே TikTok நிறுவனத்தால் தானாகவே கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. அவ்வாறு முன்னதாகவே கண்டறியப்பட்ட வீடியோக்களில் 93.9% வீடியோக்கள் பதிவேற்றப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அகற்றப்பட்டதோடு, மேலதிக பரிசீலனைகளுக்குப் பின்னர் 12,960 வீடியோக்கள் மீண்டும் தளத்தில் மீளமைக்கப்பட்டுள்ளன.
உலகளவில், இக்காலாண்டில் 188 மில்லியனுக்கும் அதிகமான (188,298,141) வீடியோக்களை TikTok நிறுவனம் அகற்றியுள்ளது. இது தளத்தில் பதிவேற்றப்பட்ட மொத்த உள்ளடக்கத்தில் சுமார் 0.5% ஆகும். இவற்றில் 18,33,44,707 வீடியோக்கள் தானியங்கி கண்டறிதல் தொழில்நுட்பத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டதுடன், மறுபரிசீலனைக்குச் பின்னர் 62,62,383 வீடியோக்கள் மீண்டும் மீளமைக்கப்பட்டுள்ளன.
இதே காலகட்டத்தில், சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கங்களை அடையாளம் காணவும் அகற்றவும் TikTok தனது தானியங்கி மதிப்பீட்டுத் தொழில்நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தியது. உலகளவில், முதல் காலாண்டில் (Q1 2026) அகற்றப்பட்ட 237,517,128 பின்னூட்டங்களுடன் ஒப்பிடுகையில், இக்காலாண்டில் மொத்தம் 278,384,463 பின்னூட்டங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், இக்காலாண்டில் 146,807,400 போலி கணக்குகளையும் தளம் அகற்றியுள்ளது. இளைய பயனர்களைப் பாதுகாக்கும் நோக்கில், 13 வயதிற்கு உட்பட்ட பயனர்களுடையது எனச் சந்தேகிக்கப்பட்ட மேலும் 26,840,767 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
வுமைவுழம இன் கொள்கைகளை மீறியதற்காக அகற்றப்பட்ட உள்ளடக்கங்களின் வகைகள் குறித்த கூடுதல் விபரங்களை இந்த அறிக்கை வழங்குகிறது. அகற்றப்பட்ட வீடியோக்களில் 19.5% உணர்வுப்பூர்வமான அல்லது முதிர்ந்த தலைப்புகளைக் கொண்டிருந்தன. மேலும் 13.7% வீடியோக்கள் தளத்தின் பாதுகாப்பு மற்றும் நாகரிக தரநிலைகளை மீறியுள்ளன. அகற்றப்பட்ட வீடியோக்களில் 13.5% ஆபத்தான செயல்பாடுகள் மற்றும் சவால்களைக் கொண்டவை என அடையாளம் காணப்பட்டவை. 13.8% வீடியோக்கள் உடல் அசைவு வெளிப்பாடு மற்றும் பாலியல் சார்ந்த நடத்தைகளைக் கொண்டிருந்தன. இதனிடையே, அகற்றப்பட்ட வீடியோக்களில் 1.8% திருத்தப்பட்ட ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களாக (AIGC) அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் தனது முழுமையான வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தும் நோக்கில், TikTok நிறுவனம் இத்தகைய வழக்கமான அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தளத்தில் மேற்கொள்ளப்படும் உள்ளடக்க மற்றும் கணக்கு சார்ந்த நடவடிக்கைகளின் தன்மையையும் அளவையும் தெளிவாக அறிந்துகொள்ள இந்த அறிக்கை வழிவகுக்கிறது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு அறிக்கை குறித்த விரிவான விபரங்கள், TikTok இன் உள்ளடக்க வழிகாட்டல்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி மேலும் அறிய விரும்புவோர், TikTok இன் உத்தியோபூர்வ 'வெளிப்படைத்தன்மை மையத்திற்கு' (Transparency Centre) விஜயம் செய்து ஆங்கில மொழியில் அறிந்துகொள்ள முடியும்.
































