Nov 4, 2026 - 12:09 PM

இலங்கையின் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்புத் துறைகள் புதியதொரு வளர்ச்சிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இலங்கையின் முன்னணி கட்டுமானத் தீர்வு வழங்குநரான INSEE, நாட்டின் கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் வகையில் INSEE Industry Connect 2026 நிகழ்வை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வு 2026 ஒக்டோபர் 21ஆம் திகதி கொழும்பு Cinnamon Life இல் நடைபெற்றது.
பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வேகமடைந்து வருவதுடன், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான வாய்ப்புகளும் அதிகரித்து வரும் வேளையில், கட்டுமானத்துறை மேலும் விவேகமாகவும், வினைத்திறனுடனும், நிலைபேறான வகையிலும் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி, வாடிக்கையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் ஆகியவையும் இத்துறையில் பல்வேறு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
“Innovate. Integrate. Impact.” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற INSEE Industry Connect 2026, கருத்துப் பகிர்வு மற்றும் ஒத்துழைப்புக்கான தளமாக அமைந்தது. இந்நிகழ்வில் தொழில்துறை வாடிக்கையாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், ready-mix கொங்கிறீட் வாடிக்கையாளர்கள், கட்டடக் கலைஞர்கள், ஆலோசகர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள், அரசாங்க பொறியியலாளர்கள், நிறுவனத் திட்ட முகாமையாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வித்துறையினர் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வு, “Building Sri Lanka’s Future” என்ற INSEE நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியது. எதிர்காலத் தலைமுறையினருக்கு நீடித்த மதிப்பை உருவாக்குவதுடன், நிலைபேறானதும் உறுதியானதுமான உட்கட்டமைப்பை உருவாக்குவதற்காக, கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் இடையில் வலுவான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாக அமைந்தது.
நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்திய INSEE Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Eng. துசித் குணவர்ணசூரிய, உற்பத்தித்திறனை அதிகரித்தல், நவீன கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துதல், டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல் மற்றும் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் கட்டுமானத்துறையை அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயார்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
“இலங்கை கட்டுமானத் துறையில் ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசித்து வருகின்றது. இந்த வளர்ச்சியானது விவேகமான முறையில் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதிலேயே தங்கியுள்ளது. தொழில்நுட்பத்தால் மாத்திரம் இத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. செயற்பாட்டு முறைகள், மனித வளம் மற்றும் பங்காளித்துவங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பரிணமிக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் இலங்கையின் கட்டுமானத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும்.”
INSEE தாய்லாந்து நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுக்கான சிரேஷ்ட உப தலைவர் சித்திச்சாய் சிருவித்தயா, கடந்த 20 ஆண்டுகளில் தாய்லாந்தின் கட்டுமானம் மற்றும் சீமெந்து தொழில்துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான தனது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். தாய்லாந்தின் கட்டுமானத் துறை அதன் வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் எதிர்கொண்ட நிலைமைகளுக்கும், தற்போது இலங்கையில் உருவாகி வரும் வாய்ப்புகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். அடிப்படை கட்டுமானப் பொருட்களை வழங்குவதிலிருந்து, மேம்பட்ட கட்டுமானத் தீர்வுகளை அடிப்படையாகக் கொண்ட நடைமுறைகளை நோக்கி அத்துறை எவ்வாறு பரிணமித்தது என்பதையும் விளக்கிய அவர், இலங்கையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் பொருத்தமான அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்வின் மூன்று முக்கிய அம்சங்களான Innovate, Integrate மற்றும் Impact, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்பாட்டு முறைகளைப் பின்பற்றுதல், கட்டுமானத் துறையில் உள்ள பல்வேறு தரப்பினரின் நிபுணத்துவம் மற்றும் ஆற்றல்களை ஒன்றிணைத்தல், அத்துடன் இத்தகைய ஒத்துழைப்பின் மூலம் பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கு நிலைபேறான பெறுபேறுகளை உருவாக்குதல் ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துரைத்தன. நிறுவனத்தின் புத்தாக்கங்களைத் தொழில்துறையுடன் இணைக்கும் தளமான INSEE i2i, கட்டுமானத் துறையில் புத்தாக்கங்களை முன்னெடுப்பதன் மூலம் இந் நோக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கின்றது.
INSEE நிறுவனமானது, தொழில்நுட்ப நிபுணத்துவம், புத்தாக்கம், கட்டுமானத் தீர்வுகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான தலைமைத்துவம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, இலங்கையின் கட்டுமானத் துறையை மேலும் வினைத்திறன்மிக்கதாகவும், வலுவானதாகவும், போட்டித்தன்மை மிக்கதாகவும் மேம்படுத்துவதற்காக தொழில்துறை பங்காளர்களுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றது.
































