Nov 5, 2026 - 05:54 PM

அறக்கட்டளைகள் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு திருத்தங்கள் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய, 1917 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க அறக்கட்டளைகள் கட்டளைச் சட்டத்திலேயே இவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
குறித்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பும் திருத்தங்கள் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது.
பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலைத் தடுப்பது தொடர்பான நிதி நடவடிக்கை பணிக்குழுவினால் (FATF) முன்வைக்கப்பட்ட அவதானிப்புகளின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவின் யோசனைகளுக்கு அமைவாகவே இச்சட்டமூலத்தில் திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
































