Nov 6, 2026 - 06:17 PM

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு 'சண்டியர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா மற்றும் வீர தீர சூரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்கள் சண்டைக்காட்சிகளை அமைக்கின்றனர்.
மேலும், ராஜ் கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
முன்னதாக கமல்ஹாசனின் இயக்கத்தில் வெளியான 'விருமாண்டி' படத்தின் ஆரம்பக்கட்டத் தலைப்பாக 'சண்டியர்' என்ற பெயர் பரிசீலிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்ட நிலையில், தற்போது அவரது புதிய படத்துக்கு அதிகாரப்பூர்வமாக இந்தத் தலைப்பு சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
































