Nov 7, 2026 - 08:55 PM

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்துக்கு கிடைக்கும் நீரின் அளவு அதிகரித்துள்ளதனைத் தொடர்ந்து, தலா ஒரு அடி வீதம் மேலும் இரண்டு வான்கதவுகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ள வான்கதவுகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது அந்த நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 5,500 கன அடி நீர் தெதுரு ஓயாவுக்கு திறந்து விடப்பட்டு வருகின்றது.
நீர்த்தேக்கத்துக்கு கிடைக்கும் நீரின் அளவு மற்றும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப, திறக்கப்படும் வான்கதவுகளின் அளவு மேலும் மாற்றமடையக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, தெதுரு ஓயாவின் கீழ்நிலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
































