Nov 9, 2026 - 04:37 PM
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்
By நுவரெலியா நிருபர் செ.திவாகரன்

நல்லதண்ணி, மரே தோட்டம், புதுக்காடு பிரிவில் நேற்று (8) தீபாவளி தினத்தன்று இரவில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்
நேற்று இரவு 11.30 அளவில் இருவருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் முற்றியதை அடுத்து, ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர் மற்றைய நபரை தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
































