Nov 12, 2026 - 06:41 PM

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகரிக்கின்ற விலைகளினால் ஏற்படும் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைத் தணிக்கும் நோக்குடன் இறக்குமதி செய்யப்படும் நெத்தலி மீதான விசேட வியாபாரப் பண்ட அறவீட்டினை கிலோ கிராம் ஒன்றுக்கு ரூ. 100 லிருந்து ரூ. 10 ஆக குறைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தமது வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மாசி கிலோ கிராம் ஒன்றுக்கு ரூ. 302 லிருந்து ரூ. 10 வரையும், அரைத்த மற்றும் அரைக்கப்படாத செத்தல் மிளகாய்கள் மீது கிலோ கிராம் ஒன்றுக்கு ரூ. 50 இதனால் விசேட வியாபாரப் பண்ட அறவீட்டினை குறைப்பதற்கு முன்மொழியப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வரித் திருத்தங்கள் நாளை (13) முதல் நடைமுறைக்கு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது
































