Nov 17, 2026 - 11:03 AM

மொஸ்வோல்ட் பொட்டிக் ஹோட்டல்ஸ் [Mosvold Boutique Hotels] நிறுவனம், தனது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் ஆரம்ப நிகழ்வாக, பலப்பிட்டியவில் அமைந்துள்ள சுந்தரா மொஸ்வோல்ட் [Sundara by Mosvold] ஹோட்டலில் திறந்தவெளி கேக் தயாரிப்புக்கான கலவை நிகழ்வொன்றை அண்மையில் நடத்தியது. ஹோட்டலின் சமையல் கலைஞர்கள், ஏனைய ஊழியர்கள் மற்றும் அங்கு தங்கியிருந்த விருந்தினர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் பாரம்பரியமான ஒரு பண்டிகைக் காலச் சடங்கை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் நிகழ்வாக இது அமைந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலம் நெருங்கும்போது, இலங்கையில் மிகவும் விரும்பப்படும் பருவகால மரபுகளில் ஒன்றாக கேக் தயாரிப்புக்கான கலவையைத் தயாரிக்கும் நிகழ்வு திகழ்கிறது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு பெரிய பாத்திரத்தைச் சுற்றி ஒன்றுகூடி, ஒருவர் பின் ஒருவராக கேக் கலவையைத் தயாரித்து, கிறிஸ்துமஸ் தினம் வரை அது பக்குவமடைவதற்காகப் பாதுகாத்து வைப்பது வழக்கமாகும். பொறுமை, ஒற்றுமை மற்றும் கைகளால் ஒன்றை உருவாக்குவதிலுள்ள மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த மரபு, கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக மட்டுமன்றி குடும்ப இல்லங்களின் அன்பான பாரம்பரியமாகவும் விளங்குகிறது.
விருந்தினர்களின் பார்வைக்குப் புலப்படாமல் சமையல் கலைஞர்கள் பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். உணவுப் பட்டியல்களைத் திட்டமிடுதல், புதிய மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுத்துப் பெற்றுக்கொள்ளுதல், ஒவ்வொரு சேவையிலும் உயர்தரத்தைப் பேணுதல் என அவர்களின் பணிகள் திறமை, ஒழுக்கம் மற்றும் நீண்ட நேர உழைப்பு ஆகியவற்றைக்கொண்டதாக திகழ்கின்றன. இந்த நிகழ்வானது, சுந்தரா ஹோட்டல் குழுவினரின் சமையல் திறமைகளையும் கைவினை நுணுக்கங்களையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்ததுடன், உணவுகளைச் சுவைப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவற்றைத் தயாரிக்கும் செயல்முறையிலும் விருந்தினர்கள் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியது.
விருந்தினர்கள் சமையல் கலைஞர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்களுடன் இணைந்து கேக் கலவையைத் தயாரிக்கும் நிகழ்வில் பங்கேற்றனர். ஹோட்டல் குழுவினரைப் பொறுத்தவரை, வழக்கமான பணிகளிலிருந்து சற்று விலகி, விருந்தினர்களை உபசரிப்பவர்களாக அவர்களை நேரடியாகச் சந்தித்து, ஒவ்வொரு உணவின் பின்னணியிலும் இருக்கும் தமது திறமையையும் அர்ப்பணிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பாக இது அமைந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் உண்மையான உணர்வு பகிர்ந்துகொள்வதிலேயே தங்கியுள்ளது. அன்றைய தினம் திறந்தவெளியில் நடைபெற்ற இந்த நிகழ்விலும் அந்த உணர்வே மேலோங்கியிருந்தது. காலி நகருக்கு வடக்கே சுமார் ஒரு மணிநேரப் பயணத்திலும், கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரண்டு மணிநேரப் பயணத் தொலைவிலும் அமைதியான கடற்கரைப் பகுதியில்சுந்தரா அமைந்துள்ளது. நீருக்கு மேலாக அமைக்கப்பட்ட நடைபாதை வழியாக விருந்தினர்கள் ஹோட்டலைச் சென்றடைய முடியும். ஜெஃப்ரி பாவாவின் கட்டடக்கலைப் பாணியைப் பிரதிபலிக்கும் வகையில் மர வேலைப்பாடுகளுடன், உட்புற மற்றும் வெளிப்புற வாழ்விட அமைப்புகளின் அழகிய கலவையில் இதன் கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எட்டு அறைகள், விசாலமான நீச்சல் தடாகம் மற்றும் தனிமையான கடற்கரை ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த ஹோட்டல், கடற்கரைப் பகுதியில் அமைதியான தங்குமிட அனுபவத்தை வழங்குகிறது. அத்துடன், அதன் உணவகம் பல்வேறு வகையான உணவுகளையும் பரிமாறுகிறது.
மொஸ்வோல்ட் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிலங்க மார்டினஸ் கருத்துத் தெரிவிக்கையில், "இந்தக் கேக் கலவைத் தயாரிப்பு நிகழ்வின் மூலம் எமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ஆரம்பிக்கின்றோம். தினமும் திறமையுடனும் அக்கறையுடனும், பெரும்பாலும் மற்றவர்களின் பார்வைக்குப் புலப்படாமல் பணியாற்றும் சமையல் கலைஞர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இது மிகவும் பொருத்தமான ஒரு வழியாகும். ஒரு கேக் கலவைப் பாத்திரத்தைச் சுற்றி எமது விருந்தினர்களையும் ஊழியர்களையும் ஒன்றிணைப்பது எளிமையான ஒரு செயலாக இருந்தாலும், நாம் வழங்க விரும்பும் விருந்தோம்பலின் சிறப்பை அது எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு விருந்தினரும் தமது இல்லத்திற்குத் திரும்பிய பின்னரும் நீண்ட காலம் மனதில் நிலைத்திருக்கும் இனிய நினைவுகளுடன் இங்கிருந்து செல்ல வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்" என்றார்.
மொஸ்வோல்ட் பொட்டிக் ஹோட்டல்ஸ் நிறுவனம், 2012ஆம் ஆண்டு அஹங்கமவில் தனது முதலாவதுபொட்டிக் ஹோட்டலை ஆரம்பித்ததுடன், தற்போது நான்கு ஹோட்டல்களை நடத்தி வருகிறது. சுந்தரா மொஸ்வோல்ட் ஹோட்டல் பலப்பிட்டியவில் அமைந்துள்ளது. மேலதிக தகவல்களுக்கு mosvoldhotels.com என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

































