Nov 17, 2026 - 11:11 AM

திருகோணமலை, கடற்கரை பகுதியில் புத்தர் சிலை ஒன்றை ஸ்தாபித்த சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் இன்று (17) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை கஸ்ஸப தேரர் தனது வழக்கறிஞர் ஊடாக நீதிமன்றத்தில் தமக்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய பிணை நிபந்தனைகளை மீறி, திருகோணமலை நீதிமன்றத்திற்கும் அநுராதபுர நீதிமன்றுக்கும் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்திருந்ததுடன், குறித்த இரண்டு குற்றங்களுக்கும் மன்னிப்புக் கோரியதன் காரணமாகவே இவ்வாறு பிணையில் விடுவிக்க திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.c

































